Thursday, May 14, 2009

உனக்குள்ள எனக்கு பிடிச்சது ஜன்னல் ஓர சேரு



பகட்டான உடை அணிந்து வந்தால்
உனக்கு பெயர் சொகுசு
பரிதாபமாய் நீ வந்தால்
உனக்கு இல்லை மவுசு.

அரசு புகை பிடிக்க தடை போட்டு
பல காலம் ஆச்சு
அதை கடை பிடிக்க உனக்கு மட்டும்
விதி விலக்குன்னு பேச்சு.

உனக்குள்ள எனக்கு பிடிச்சது
ஜன்னல் ஓர சேரு
சாலையில் நீ எனக்கு எப்பொழுதும்
தேவலோக தேரு

கரெக்ட் டைமுக்கு டிரைவர் அண்ணன்
கொண்டு வரமாட்டாரு உன்னை
ரைட் தான் கண்டெக்டர் அண்ணன்
சொல்லிடுவாரு நான் ஏறுவதற்க்கு முன்னே

பல நேரம் கேக்க மாட்ட
பிரேக் பேச்ச
சில நேரம் வாங்கிடுவ
எங்க மூச்ச

பல ஊர பாத்தாலும் இல்லை
உனக்கு அலுப்பு
சில ஊருக்கு போக மாட்டீங்கிற
ஏன் இந்த வெறுப்பு

நீ எப்பொதும் எனக்கு
கனவு கன்னி
உனக்காக காத்திருந்து எனக்கு
தவிக்குது தண்ணி.

27 comments:

  1. சங்கமம் போட்டிக்கா நண்பா? நல்லாத்தான்பா க்கீது..

    ReplyDelete
  2. நல்ல கவிதை டி ஆர் பார்த்தா அவ்வளவு தான்

    ReplyDelete
  3. டீ ஆர் கூட தேர்தல் பிரச்சாரம் போணீங்களோ..?

    ReplyDelete
  4. //அரசு புகை பிடிக்க தடை போட்டு
    பல காலம் ஆச்சு
    அதை கடை பிடிக்க உனக்கு மட்டும்
    விதி விலக்குன்னு பேச்சு.//


    ஜூப்பரு!

    ReplyDelete
  5. "கரெக்ட் டைமுக்கு டிரைவர் அண்ணன்
    கொண்டு வரமாட்டாரு உன்னை
    ரைட் தான் கண்டெக்டர் அண்ணன்
    சொல்லிடுவாரு நான் ஏறுவதற்க்கு முன்னே"

    அதாவது.., (கொஞ்சம் அழுத்தி வாசிக்கவும்)

    "கரெக்ட் டைமுக்கு டிரைவர் அண்ணன்
    கொண்டு வரமாட்டாரு உன்னை...
    ரைட் தான் கண்டெக்டர் அண்ணன்
    சொல்லிடுவாரு - நான் ஏறுவதற்க்கு முன்னே"

    கவித.., கவிதை..சூபபர் பாஸ்!

    ReplyDelete
  6. கார்த்திகைப் பாண்டியன் said...

    சங்கமம் போட்டிக்கெல்லாம் இத கொண்டு போன தடியடி தான். வாழ்த்துக்கு நன்றி வாத்தியார் நைனா.

    ReplyDelete
  7. Suresh Kumar said...
    நல்ல கவிதை டி ஆர் பார்த்தா அவ்வளவு தான்

    வாங்க சுரேஷ். டி.ஆர் தேர்தலால கொஞ்சம் பிஸி அதனால கண்டுக்க மாட்டரு.

    ReplyDelete
  8. Kanna said...

    அவரோட கட்சில சேர்ந்தா தான் சேர்ப்பாராம். அதனால பேப்பர்ல அவர ஃபாலே பண்ணேன்.

    ReplyDelete
  9. வால்பையன் said...

    ஜூப்பரா. தேங்கிசு பாஸு

    ReplyDelete
  10. முக்கோணம் said...

    எனக்கு கழுத கழுதன்னு கேக்குது.

    ReplyDelete
  11. //மனுசன் காலையில நீராடனும் அது மாதிரி வாழ்க்கையில போராடனும்//

    //பல ஊர பாத்தாலும் இல்லை
    உனக்கு அலுப்பு
    சில ஊருக்கு போக மாட்டீங்கிற
    ஏன் இந்த வெறுப்பு//


    தலைவர் உங்களை ரொம்ப பாதிச்சுட்டாரோ....

    ReplyDelete
  12. வாங்க சாரதி

    தலைவர் பேச்சு யாரத்தான் பாதிக்கல!

    ReplyDelete
  13. //பகட்டான உடை அணிந்து வந்தால்
    உனக்கு பெயர் சொகுசு
    பரிதாபமாய் நீ வந்தால்
    உனக்கு இல்லை மவுசு.//


    எல்லாமே நல்லாயிருக்கு

    ReplyDelete
  14. ///பகட்டான உடை அணிந்து வந்தால்
    உனக்கு பெயர் சொகுசு
    பரிதாபமாய் நீ வந்தால்
    உனக்கு இல்லை மவுசு.

    அரசு புகை பிடிக்க தடை போட்டு
    பல காலம் ஆச்சு
    அதை கடை பிடிக்க உனக்கு மட்டும்
    விதி விலக்குன்னு பேச்சு.///

    நகைச்சுவையோடு இழையோடும் யதார்த்தம் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  15. வாங்க வசந்த்
    வாழ்த்துக்கு நன்றி ஜீவராஜ்

    ReplyDelete
  16. சென்னை-28 படத்துல சிவா சொல்லுவாரே "சென்னையில இருக்கறது அண்ணா சால, ரஜினி காந்த் நடிச்ச படம் முரட்டு காள". அது மாதிரி காமெடியா இருக்கு.

    ஆமா, இந்த மாதிரி காமெடி பீஸ கூட சம்க்கமம் போட்டிக்கு எடுத்துக்குறாங்களா என்ன?

    ReplyDelete
  17. பல நேரம் கேக்க மாட்ட
    பிரேக் பேச்ச
    சில நேரம் வாங்கிடுவ
    எங்க மூச்ச
    ///

    எதர்த்தம் !!!

    ReplyDelete
  18. காமெடியா எழுதினாலும் கலைவாணர் மாதிரி சமூக அக்கறையும் இருக்கு!!

    ReplyDelete
  19. ரொம்ப நல்லா இருக்கு :))))

    ReplyDelete
  20. வாங்க பப்பு. பேராசியருக்கு கொஞ்சம் நக்கல் அதிகம், அதனால தான் சங்கமத்தை இங்க இழுத்துபுட்டாறு.

    ReplyDelete
  21. நன்றி தேவா சார். எதோ பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுறீங்க.

    ReplyDelete
  22. விஷ்ணு!!!
    அடுத்த T R நீங்க தான்!!!!

    ReplyDelete
  23. தமிழ்ப்பிரியா said...

    அய்யயோ!!

    ReplyDelete
  24. "அரசு புகை பிடிக்க தடை போட்டு
    பல காலம் ஆச்சு
    அதை கடை பிடிக்க உனக்கு மட்டும்
    விதி விலக்குன்னு பேச்சு."

    Nice Anna... Keep going

    ReplyDelete
  25. பேரூந்தை அருமையாக அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து விட்டீர்கள்.
    ஸ்பீட்பிரேக் இல்லாமல் சர்ர்ர்ரென்று செல்கிறது கவிதை நடை
    மேலும் எழுத வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  26. வாழ்த்துக்கு மிக்க நன்றி GOMA

    ReplyDelete