Monday, May 18, 2009

பில்கேட்ஸை கைது பண்ணாங்களா?

1977 இல் பில்கேட்ஸ் வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றதால் கைது செய்யபட்டார்.







மன்சூர் அலிகான் தோல்வி.






ஊதா கலரு சட்டை போட்டு
ஊரெல்லாம் சொல்லிகிட்டு
இலட்சியம் தான் உனக்கிருக்குன்னு
இலட்சிய தி.மு.கவிலுல சேர்ந்ததுமே
உன் தலைவர் உனக்கு தான்
திருச்சின்னு ஒதுக்கி வைச்சான்

கடல மிட்டாய் வாங்கி குடுத்து
கட்சிகாரனை இழுக்க நினைச்ச
கட்டிங் கிடைக்குதுன்னு - பல
கட்சிக்கு பயபுள்ளைக ஓடி போயிட்டான்

பட்டம் தான் உன் சின்னமுன்னு
பக்குவமா எலக்ஷன் கமிஷன் சொன்னதும்
பல தெருவுக்கு போய்
ஓட்ட கேட்ட - சத்திரம்
பஸ் ஸ்டாண்டுக்கும் போய்
ஓட்ட தான் - நீ கேட்ட

உன்னையே நாயின்னு -
நீ சொல்லிகிட்டு
திருஞ்சத பார்த்த மக்கள்
பைத்தியம் தான் நீ-ன்னு
பயந்து போயி
பக்கத்து கட்சிக்கு ஒட்ட போட்டு
படுதோல்வி உன்னை ஆக்கினாங்க

பல தோல்வி - நீ கண்ட
படு தோல்வியும் - நீ கண்ட
பக்க பலமா யார் இருக்க
பதினொன்னுல நீ முதல்வராக


Thursday, May 14, 2009

உனக்குள்ள எனக்கு பிடிச்சது ஜன்னல் ஓர சேரு



பகட்டான உடை அணிந்து வந்தால்
உனக்கு பெயர் சொகுசு
பரிதாபமாய் நீ வந்தால்
உனக்கு இல்லை மவுசு.

அரசு புகை பிடிக்க தடை போட்டு
பல காலம் ஆச்சு
அதை கடை பிடிக்க உனக்கு மட்டும்
விதி விலக்குன்னு பேச்சு.

உனக்குள்ள எனக்கு பிடிச்சது
ஜன்னல் ஓர சேரு
சாலையில் நீ எனக்கு எப்பொழுதும்
தேவலோக தேரு

கரெக்ட் டைமுக்கு டிரைவர் அண்ணன்
கொண்டு வரமாட்டாரு உன்னை
ரைட் தான் கண்டெக்டர் அண்ணன்
சொல்லிடுவாரு நான் ஏறுவதற்க்கு முன்னே

பல நேரம் கேக்க மாட்ட
பிரேக் பேச்ச
சில நேரம் வாங்கிடுவ
எங்க மூச்ச

பல ஊர பாத்தாலும் இல்லை
உனக்கு அலுப்பு
சில ஊருக்கு போக மாட்டீங்கிற
ஏன் இந்த வெறுப்பு

நீ எப்பொதும் எனக்கு
கனவு கன்னி
உனக்காக காத்திருந்து எனக்கு
தவிக்குது தண்ணி.

Wednesday, May 13, 2009

என்ன கார்த்திக் உங்க ஒர்த் இவ்வளவுதானா?

இன்றைய செய்தி தாள்களை படிக்கும் பொழுது சில செய்திகள் மனசை ரணகள படுத்திவிட்டது அதை உங்களுடம் பகிர்ந்து கொள்கிறேன்



செய்தி : வருண் காந்தி உத்திர பிரதேச முதல்வராக விருப்பம்







செய்தி : கார்த்திக் ரூ 5 லட்சம் பணமோசடி : தேனி வேட்பாளர் பார்வதி புகார்








செய்தி : நான்காவது அணியில் விரிசல் இல்லை : பாஸ்வான் திட்டவட்டம்







செய்தி : உயர்நீதி மன்றத்தில் கிரகலட்சுமி அப்பீல், குடும்ப நல கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து

Tuesday, May 12, 2009

மனுசன் காலையில நீராடனும் அது மாதிரி வாழ்க்கையில போராடனும்

நேற்று விஜய.டி.ஆரின் பேட்டி ஒன்றை கண்டேன். அதில் அவர் பேசிய பேச்சின் சில வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்(ல்)ளத்தான் இந்த பதிவு.







































அப்பு, பட்ட போட்டு காய்ச்சுன மரமா இல்ல பட்ட போடாத மரம்,ஏன்னா பட்ட போட்டு காய்ச்சுனாதான் ஜ்வ்வு ஏறுமுன்னு பெரியவங்க சொல்லுவாங்க. அது சரி காய்ச்ச மரத்துக்கு கல்லடி, காய்ச்சாத மரத்துக்கு உங்க சொல்லடியா? அம்மாடி.

Monday, May 11, 2009

எதை கொண்டு வந்தாய் இழப்பதற்க்கு

தினதந்தி செய்தி :கொல்கத்தா அரைஇறுதி வாய்ப்பை இழந்தது

டிஸ்கி : அப்பு இது தெரிஞ்சுக்க இவ்வளவு காலமா உங்களுக்கு எங்க கிட்ட கேட்டுருந்தா முன்னாடியே சொல்லிருப்போம்ல.






வித்தியாசமா பன்ணுறாங்களாம்.



காலுல விழுந்த்துட்டா மட்டும் நாங்க உங்க பேச்ச கேட்போமுன்னு நினைச்சியா? போப்பா போய் வேற எதாவது உருப்பிடியான வேலை இருந்தா பாரு. காமெடி பண்ணிகிட்டு இருக்க

ஆசிர்வாதம் வாங்குபவர் : சத்தியாகிரக அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ராமகிருஷ்ண சாஸ்திரி
ஆசிர்வாதம் வழங்குபவர் : ஏதோ துணிகடை அம்மா
ஆசிர்வாதம் வாங்குவதன் நோக்கம் : நல்லவங்களுக்கு ஓட்டு போடனுமாம்.
படம் : தினமலர்

Saturday, May 9, 2009

தொலைக்காட்சி


அந்த குழந்தைகளின் ஆட்டம்
பார்க தடையாயிருந்தாய்
என் நண்பர்களின் அரட்டை
ஆரவாரம் இல்லாமலாக்கினாய்


நிலையான மனது தான்
உன்னிடம் உள்ளதா
கோபம் கொள்கிறாய், திடிரென
கூல் என்கிறாய்
சிரிப்பு காட்டுகிறாய்,சிலநேரத்தில்
அழுக வைக்கிறாய்

நீ ஆண்களுக்கு ஜஸ்வர்யாராயா
இல்லை பெண்களுக்கு மன்மதனா
எந்நேரமும் உன்னை கண்
இமைக்காமல் காண வைக்கிறாய்

உன்னில் தவறில்லை
உன்னை பார்க்கும் மனிதர்கள்
தவறிப்போவதை தவிர.

Friday, May 8, 2009

மலர்களே...மலர்களே


ஒருநாள் வாழ்வு தான் உனக்கு
என்று என்னையே நான் சமாதானம்
செய்து கொண்ட நாட்களும் உண்டு.

சவ ஊர்வலத்தில் சாலையில் விழுந்து
கால்களில் அடிபட்டு நீ இறக்கும் கணங்களை
பார்த்து சிரித்த கணங்களும் உண்டு.

என்னவளின் தலை மீது அமர்ந்து
சிரிக்கும் பொழுது திமிர் பிடித்து அலைகின்றாய்
என்று நினைத்த நாட்களும் உண்டு.

கடவுளின் கழுத்தில் கம்பீரமாக
இருக்கும்பொழுது நீ ஆணவம் பிடித்தவள்
என்று எண்ணிய கணங்களும் உண்டு.

சாலையில் சக்கரத்தில் அடிபட்டு அருவருப்பாய்
இறந்த நண்பனின் மேனியை அழகாய்
மாற்றி புத்தி புகட்டினாய்
யாருக்கேனும் நலம் பட இரு.

Wednesday, May 6, 2009

அண்டத்தில் ஒரு பயணம்


5 வயசாக இருந்தாலும் இராகேஷ் கொஞ்சம் அதி புத்திசாலியாகதான் இருக்கான்.

"அப்பா, சுத்தமா போர் அடிக்குதுப்பா சும்மா ஒரு அண்ட டூர் போகலாமுன்னு இருக்கேன் போய் ஏதாவது புதுசா ஏதாவது பிளானட் கண்டுபிடிக்க போறேன்
அதுக்கு 'ராக்கி 100' பெயர் வைக்கனும் ஏன்னா நான் கண்டுபிடிக்க போர 100 வது பிளானட், ஒரு வேளை என்னுடைய இலட்சியமான கடவுள் இருக்கிற பிளானட்டை கண்டுபிடிச்சாலும் கண்டுபிடிச்சுடுவேன்"

"பக்கத்துலயே ஏதாவது கண்டுபிடிப்பா. நீ ரொம்ம தூரம் போயி கண்டுபிடிக்கிற, சரி எதுல டிராவல் பண்ணுர? யுனிவர்சல் பிளைட்டா இல்ல யுனிவர்சல் ராக்கெட்டா? ரிசர்வ் பண்ணிட்டியா ?"

"இல்லப்பா இந்த தடவ நான் ஸ்கை ஸ்கூட்டர்ல தான் டிராவல் பண்ணபோறேன்"

"ரொம்ப அலுப்பா இருக்குமே?"

"வந்து ரெஸ்ட் எடுத்துகிட்டா சரியாயுடும்"

"சரி, சில இடத்துக்கு போன பியுயல்(fuel) கிடைக்காது அந்த பியுயல் பேக்கை(bag) எடுத்துக்கோ"

"சரிப்பா, நம்ம மாமா அடுத்த வருசத்துல ஜெயில்ல இருந்து விடுதலை ஆயிடுவாருல"

"ஆமா, எதுக்கு கேக்குரா?"

"இல்லை ஜெயில்னா எப்படி இருக்கும் என்னவெல்லாம் பண்ணுவாங்கன்னு கேட்கனும்"

"அதுக்கு ஏன் மாமாவ கேட்கனும், நான் சொல்லுரேன்"

"இல்லப்பா அவர்கிட்ட கேட்டா அனுபவ பூர்வமாக சொல்லுவாருல்ல அதான்"

"அதுக்கேன்ன அவர்கிட்டயும் கேட்டுக்க, நானும் சொல்லுரேன், ஜெயிலுங்கிறது ஒரு குட்டி பிளானட், அந்த கிரகத்துகுள்ள மட்டும் தான் சுத்திகிட்டு ஒருக்கனும். ஒரு வேலையும் குடுக்க மாட்டாங்க, அந்த கிரகம் சுத்தமாவே இருக்காது, பழைய டெக்னாலஜிஸ் தான் யூஸ் பண்ணுவாங்க, ஒரு காலத்துல அந்த கிரகம் தான் மனித இனத்தோட ஆதாரமா இருந்தது, அதுக்கு பேரு பூமி"

"அப்ப அந்த காலத்துல எல்லாம் எல்லாரும் ஜெயில்ல இருந்தாங்கன்னு சொல்லுங்க"

(யாவும் கற்பனையே,தொடரும்)

Tuesday, May 5, 2009

மகாலிங்க மலை கருப்பண்ண சாமி


மகாலிங்க மலை பற்றி தெரியனுமா இங்க படிச்சு தெரிஞ்சுக்கோங்க

நான் எம்.சி.ஏ. முதலாமாண்டு படிக்கும் பொழுது, காலேஜ்ல டூர் போனாங்க. சில பல காரணங்களால் நான் டூர் போகலை. அதே போல சில பசங்களும் டூர் போகலை.
அதுல மூணு பேர் மட்டும் மாகலிங்க மலைக்கு போகலாமுன்னு பிளான் பண்ணினோம். எங்க ஊர்ல இருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில இருந்தாலும் நான் போனதில்லை அதனால போகலாமுன்னு முடிவு செஞ்சு பஸ் ஏறி வற்றாயிருப்பு ஊருக்கு போயச்சு.

மலை மேல அன்னதானம் போடூவாங்க என்பது தெரியும், இருந்தாலும் வழி பயணத்தில சாப்பிட பிஸ்கட்டும், முறுக்கும் வாங்கிட்டோம்.
மேல சில கடைகள் இருந்தாலும் ஒரு ரூபாய் அதிகமா தான் விப்பாங்கன்னு என் நண்பன் சொன்னதுனால அத மிச்சபடுத்த வற்றாயிருப்பு ஊருலயே வாங்கிகிட்டோம்(படிக்கிற காலத்துல வீட்டுல குடுக்கிற ஜந்து பத்து ரூபாய் தான் நம்ம சொத்து). மினி பஸ் ஏறி நாலு ரூபாய் டிக்கட் எடுத்து ம்லை அடிவாரம் போய் சேர்ந்தாச்சு அந்த இடத்துக்கு பெயர் தாணிபாறை. கடைசி பஸ் மாலை 6:45க்குன்னு கண்டக்டர் அண்ணன்கிட்ட கெட்டு தெரிஞ்சுகிட்டோம். மலை அடிவாரத்துல இருக்கிற கருப்பண்ண சாமிய கும்பிட்டு மலை ஏற ஆரம்பிச்சோம், என்னால சுத்தமா ஏற முடியல ரெண்டு நிமிசம் நடப்பேன் பத்து நிமிசம் உட்காந்திருப்பேன். அப்பதான் என் நன்பன் கீழ உக்காரதாடா அழுப்பா இருந்தா மலையிலயே அப்படியே சாஞ்சுக்கோன்னு சொல்ல நானும் அப்படியே செய்ய கொஞ்சம் ஆறுதலா இருந்தது, இருந்தாலும் ரொம்பவே கஷ்டபட்டு தான் ஏறிகிட்டு இருந்தேன். ஆனா பாட்டி மார்களும் தாத்தாமார்களும் எந்த கஷ்டமும் இல்லாமல் ஏறிகிட்டு இருந்தாங்க. சில பேர் ஏற முடியாம கீழ போக ரெடியாகிட்டு இருந்தாங்க.பாதி மலை தாண்டி இருப்போம், இடையில கோரக்கர் சித்த்ர் குகை ஒன்னு இருக்கு, அருகிட்ட போய் ஏதாவது தப்பு செஞ்சிருந்தா மன்னிச்சுக்கோங்கன்னு வேண்டிக்கிட்டு கொஞ்ச நேரம் அந்த இடத்துல உட்காந்துகிட்டு அப்புறம் நடக்க ஆரம்புச்சோம், என்ன ஒரு ஆச்சரியம் கொஞ்சம் கூட அலுப்பு தெரியல. மலைக்கு மேலே ஏறியாச்சி நேர சுந்தர மாகலிங்கத்தை கும்பிட்டு,சாப்பிடலாமுன்னு அன்ன சத்திரத்துக்கு போனோம் எல்லாம் காலியா போச்சுன்னு சொன்னவங்க, களி சாப்பிடுவீங்களாப்பான்னு கேட்டாங்க நாங்களும் சாப்பிடுவோமுன்னு சொல்ல பத்து நிமிசத்துல தயார் பண்ணீறோமுன்னு சொல்லி களி செய்ய ஆரம்பிச்சாங்க, தயாரன உடனே எங்களை கூப்பிட்டு உக்கார சொல்லி களி போட்டாங்க. சரியான பசி என்பதால் முதல் ரவுண்டு வேகமா சாப்பிட்டேன், நான் சாப்பிட்ட வேகத்தை பார்த்து அங்க இருந்தவங்க ரெண்டாவது ரவுண்டு வச்சுபுட்டாங்க என்னால சாப்பிட முடியல பக்கத்துல இருந்த என் அருமை நண்பன் ரசிச்சு ருசிச்சு சாப்புட்டு இருந்தான் அவனுக்கே தெரியாம அவன் தட்டுல களிய வச்சுபுட்டு கை கழுவ போயிட்டேன். அப்புரம் சந்தன மாகலிங்க சாமிய தரிசனம் செஞ்சுட்டு, கொஞ்ச தூரம் மலை பக்கம் போவோமுன்னு நடக்க ஆரம்பிச்சோம் . அங்க வன தேவதைகள் நிறைய இருக்கு, நாங்களும் இரண்டு வனதேவதைகளை கும்பிட்டு. அடுத்த வனதேவதையை தேட போகும் போது ஒரு பெரியவர் என்னடா பண்ணுறீங்க. ஒங்கள மாதிரி ஆளுக வன தேவதைகள் கும்பிட கூடாதுடா, கும்பிட்டா கூட வந்துரும், அப்புரம் உங்க ஊருல கோவில் கட்ட சொல்லும் திருவிழா நடத்த சொல்லும், முடியுமா உங்களாள" ன்னு கேட்க எங்க மூணு பேருக்கு ஆட்டம் குடுக்க ஆரம்பிச்சிருச்சு. ஏன்னா இதுக்கு முன்னாடி ரெண்டு வனதேவதைகளை கும்புட்டுவிட்டோம், அந்த தேவைதைகள் கூட வந்துட்டா இருந்தாலும் பலா மரத்து அடி கருப்பண்ண சாமிகிட்ட வேண்டிக்கிருவோம் நினைச்சு அத பத்தி மறந்துடோம். மணி அஞ்சு அரை மணி இருக்கும் சரி கிளப்புவோமுன்னு சுந்தர மாகலிங்கத்தை கும்பிட்டு வெளியில வந்தா ஒரு பாட்டிமா

'எங்கப்பா கிளப்பிட்டீங்கன்னு கேட்டாங்க, நாங்களும் கீழ போறோம்ன்னு சொல்ல, கையில தீ பந்தம் வச்சுருக்கீங்கலான்னு கேட்க இல்லைன்னு சொன்னோம், அப்ப காலையில போங்க. காட்டெருமைங்க நிறைய அழையுதுங்க, அப்புறம் பாதை வேற சரியா தெரியாது' ன்னு சொன்னாங்க,இதையே நிறையா பேர் சொல்ல எங்களுக்கு கொஞ்சம் பயம் தட்டீருச்சி இருந்தாலும் வீட்டுல எங்கள தேடுவாங்கன்னு சொல்லீட்டு கிளம்பினோம். பலாஅடியான் கருப்பண்ண சாமிகிட்ட 'நல்ல படியா எங்களை கீழ ஏறக்கி விட்டுருப்பா'ன்னு வேண்டிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சோம். நடக்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலே இருட்ட ஆரம்பிச்சிருச்சு. ஒரு சமயத்துல சுத்தமா வழியே தெரியல. ஆளுக்காளுக்கு ஒரு வழிய காட்ட, நான் ஒரு வழிய காட்ட அந்த வழியில போனா அறாவது அடியில நூறு அடி பள்ளம் கொஞ்சம் கவனம் தவறி இருந்தாலும் சிவன் மலையில இருந்து கைலாயத்திற்க்கு போயிருப்போம். மனசு முழுசும் பயம் தான், விடிஞ்சதுக்கு அப்புரம் போயிக்கிலாமுன்னு அப்படியே அந்த இடத்துலயே உக்காத்துட்டோம். கருப்பண்ண சாமியை கொஞ்சம் திட்டிட்டு இருந்தோம், ரெண்டாவது நிமிசத்துல கண்ணு மின்னிகிட்டு ஒரு உருவம் மலை சரிவுல இருந்துச்சு அத பார்த்தும் எங்க மூணு பேரும் ஒட்டிகிட்டு உக்காத்துகிட்டோம். கடைசில பார்த்தா கருப்பு கலருல ஒரு நாய் வந்து நின்னு எங்கள பார்த்து குலைக்க ஆரம்பிச்சு. நாங்க அப்படியே உக்காந்துகிட்டு இருந்தோம், அந்த பைரவர்(நாய்ன்னு சொல்லுவதை விட பைரவருன்னு சொன்ன நல்லாயிருக்குமுன்னு தோனிச்சு) நடக்க ஆரம்பிச்சாரு. அப்பதான எங்க மூணு பேருல ஒருத்தன் ஒருவேளை நமக்கு வழி காட்டுதோ என்னமோன்னு சொல்ல நாங்களும் அவர் பின்னாடி நடக்க ஆரம்பிச்சோம். அவரும் வழி காட்ட நாங்களும் நடக்க ஆரம்பிச்சோம்.

ஏதாவது வித்தியாசமா சப்தம் கேட்டா அந்த பைரவர் எங்க குறுக்க வந்து நின்னுடுவாரு. அப்புறம் கொஞ்ச தூரம் அவர் மட்டும் போய் பார்த்து சிக்னல் குடுப்பாரு நாங்க மூணு பேரும் அவர் பின்னாடி போவோம். இடையில குதிரை ஏற்றம்முன்னு ஒரு இடம் வரும் அங்க ஒரு நீரோடை இருக்கு அதுல கொஞ்சம் தண்ணீர் அதிகமா தான் போய்கிட்டு இருந்துச்சு. காலையில வரும் பொழுது இடையில இருந்த கல்லுல ஏறி ஒரு வழிய வந்துட்டோம். ஓடையில இறங்கி நடந்த இடுப்பு வரைக்கும் தண்ணீர் இருக்கும் இருந்தாலும் ஏறங்கி நடக்க பயம், கல்லும் இருட்டுல சரியா தெரியல. நாங்க மூணு பேரும் எருமை மாடுக மாதிரி நின்னுகிட்டு இருந்தோம், எங்க கூட்டிட்டு வந்த பைரவர் ஓடைய தாண்டி நடந்து போய்கிட்டு இருந்தாரு, கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புரம் திருப்பி பார்த்தாரு, நாங்க திரு திரு முழிச்சுகிட்டு இருந்த பார்த்தவரு ரெண்டு தடவ குலைச்சாரு(ஒரு வேளை கெட்ட வார்த்தையில திட்டிருப்பாரோ?) அப்புரம் ரெண்டு தடவ ஓடைய தாண்டி காட்டுனாரு அப்புரம் நாங்களும் தாண்டி வந்துட்டோம்,இப்படி ஏழு கிலோ மீட்டர் எங்க கூட வந்தாரு, கடைசில கீழ இருக்கிற கருப்பண்ண சாமி கோவில் வந்துருச்சி நாங்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுட்டு கருப்பண்ண சாமிகிட்ட தேங்க்ஸ் சொல்லிட்டு நம்மள காப்பாத்தி கூட்டி வந்த பைரவருக்கு பிஸ்கட் போடுவோமுன்னு திருப்பி பார்த்தா தலைவர காணோம் நாங்களும் சுத்தி எல்லா இடத்துலயும் தேடி பார்த்துட்டு கடைசில கருப்பண்ண சாமிய பார்த்தா எப்பவும் உக்கிரமா இருக்கிறவரு எங்கள பாசத்தோட பார்த்து சிரிச்ச மாதிரி இருந்துச்சு

Monday, May 4, 2009

லவ் மேட்டரு


நான் காதலிச்ச பெண்ணை பார்க்க 'மதுர' போகலாமுன்னு 'சிவகாசி' பஸ் ஸ்டாண்டுல போய் பஸ் ஏறி போய் அவள் பார்த்தா, அவ கனவுல வந்த ஆளு 'வில்லு' அம்போட வந்தானாம் அதனால என்னை காதலிக்க மாட்டேன்ன்னு சொல்லிட்டா இருந்தாலும் 'காதலுக்கு மாரியாதை' செய்யனுமுன்னு 'பூவே உனக்காக' தான் நான் சொல்ல, சீ போட 'போக்கிரி' நாயேன்னு திட்ட, நாமலும் 'ஆதி' அந்தம் இல்லாதவன் மாதிரி நிக்க 'திருப்பாச்சி' அருவாளோட அவ்ங்க அப்பா வந்து அவளுக்கு 'கோயம்புத்தூர் மாப்ளே' பார்த்தாச்சுடா ஓடிடுன்னு சொல்ல நானும் 'குருவி' மாதிரி ஓடி ஒழிஞ்சி, மறுநாளும் அவள பார்க்க போய்

'நெஞ்சினிலே' நீ தானடி
உன்னை வேட்டையாட வந்த
வேட்டைகாரன் நான் தானடி.
கண்ணுக்குள் நிலவாய் நீ தானடி எப்பொழுதும்
என் பிரியமானவளே'ன்னு

கவிதை பாட அவ கனவுல வந்தவனும் இந்த கவிதைய பாடினானம் அதனால அவ சொன்னா என் கனவுல வந்த 'மின்சார கண்ணா' நீ தானடான்னு சொல்ல
நானும் 'குஷி''ஒன்ஸ்மோர்' கேட்க அவ அப்பன் வந்து ஒரு 'பந்தயம்' வச்சான். என் பொண்ண யாரு ரொம்ப பார்க்குறாங்களோ அவனுக்கு தான் என் பொண்ண கல்யாணம் முடிச்சி தருவேன்னு சொல்ல
அந்த 'கோயம்புத்தூர் மாப்ளே' இரண்டு செகண்டுக்கு மேல பாக்க முடியாம ஓட நீ தான் என் பொன்ன கட்டிக்க வந்த 'ஷாஜகான்'னு சொல்லி கல்யாண நாள் முடிவு பண்ணிட்டு கல்யாணம் கோவில்ல தான் பண்ணனுமுன்னு சொல்லி 'திருமலை' கோவிலா இல்லை 'பகவதி' அம்மன் கோவிலா மண்டைய போட்டு ஒடிச்சி 'தமிழன்' முறைப்படி வீட்டிலே கல்யாணம் வைச்சுகிற எல்லாரும் ஒத்துகிற சமயத்தில 'சுக்கிரன்' சரியான இடத்துல இல்லைன்னு ஜோசியகாரன் சொல்ல கல்யாணத்தை நிப்பாட்டி போயிட்டானுங்க, நானும் காலமெல்லாம் காத்திருப்பேன்' சொல்லி என் 'பிரெண்ட்ஸ்'க்கு லெட்டர் போட்டு விசயத்தை எல்லாம் சொல்லி கடைசில
'பிரியமுடன்'
'விஷ்ணு'
ன்னு
முடிக்கும் பொழுது தப்புச்சோம்டா சாமின்னு கோரஸ்ஸா சப்தம் கேட்க தூங்கிட்டு இருந்த நான் முழிச்சு பார்க்கும் பொழுது அழகிய தமிழ் மகன் படம் முடிஞ்சு போச்சு.