Monday, May 4, 2009
லவ் மேட்டரு
நான் காதலிச்ச பெண்ணை பார்க்க 'மதுர' போகலாமுன்னு 'சிவகாசி' பஸ் ஸ்டாண்டுல போய் பஸ் ஏறி போய் அவள் பார்த்தா, அவ கனவுல வந்த ஆளு 'வில்லு' அம்போட வந்தானாம் அதனால என்னை காதலிக்க மாட்டேன்ன்னு சொல்லிட்டா இருந்தாலும் 'காதலுக்கு மாரியாதை' செய்யனுமுன்னு 'பூவே உனக்காக' தான் நான் சொல்ல, சீ போட 'போக்கிரி' நாயேன்னு திட்ட, நாமலும் 'ஆதி' அந்தம் இல்லாதவன் மாதிரி நிக்க 'திருப்பாச்சி' அருவாளோட அவ்ங்க அப்பா வந்து அவளுக்கு 'கோயம்புத்தூர் மாப்ளே' பார்த்தாச்சுடா ஓடிடுன்னு சொல்ல நானும் 'குருவி' மாதிரி ஓடி ஒழிஞ்சி, மறுநாளும் அவள பார்க்க போய்
'நெஞ்சினிலே' நீ தானடி
உன்னை வேட்டையாட வந்த
வேட்டைகாரன் நான் தானடி.
கண்ணுக்குள் நிலவாய் நீ தானடி எப்பொழுதும்
என் பிரியமானவளே'ன்னு
கவிதை பாட அவ கனவுல வந்தவனும் இந்த கவிதைய பாடினானம் அதனால அவ சொன்னா என் கனவுல வந்த 'மின்சார கண்ணா' நீ தானடான்னு சொல்ல
நானும் 'குஷி'ல 'ஒன்ஸ்மோர்' கேட்க அவ அப்பன் வந்து ஒரு 'பந்தயம்' வச்சான். என் பொண்ண யாரு ரொம்ப பார்க்குறாங்களோ அவனுக்கு தான் என் பொண்ண கல்யாணம் முடிச்சி தருவேன்னு சொல்ல
அந்த 'கோயம்புத்தூர் மாப்ளே' இரண்டு செகண்டுக்கு மேல பாக்க முடியாம ஓட நீ தான் என் பொன்ன கட்டிக்க வந்த 'ஷாஜகான்'னு சொல்லி கல்யாண நாள் முடிவு பண்ணிட்டு கல்யாணம் கோவில்ல தான் பண்ணனுமுன்னு சொல்லி 'திருமலை' கோவிலா இல்லை 'பகவதி' அம்மன் கோவிலா மண்டைய போட்டு ஒடிச்சி 'தமிழன்' முறைப்படி வீட்டிலே கல்யாணம் வைச்சுகிற எல்லாரும் ஒத்துகிற சமயத்தில 'சுக்கிரன்' சரியான இடத்துல இல்லைன்னு ஜோசியகாரன் சொல்ல கல்யாணத்தை நிப்பாட்டி போயிட்டானுங்க, நானும் காலமெல்லாம் காத்திருப்பேன்' சொல்லி என் 'பிரெண்ட்ஸ்'க்கு லெட்டர் போட்டு விசயத்தை எல்லாம் சொல்லி கடைசில
'பிரியமுடன்'
'விஷ்ணு' ன்னு
முடிக்கும் பொழுது தப்புச்சோம்டா சாமின்னு கோரஸ்ஸா சப்தம் கேட்க தூங்கிட்டு இருந்த நான் முழிச்சு பார்க்கும் பொழுது அழகிய தமிழ் மகன் படம் முடிஞ்சு போச்சு.
Subscribe to:
Post Comments (Atom)
முடியல!
ReplyDeleteஉக்காந்து யோசிப்பாய்ங்களோ?
ReplyDeleteவால்பையனாலே முடியலைனா யாருகிட்ட போய் நான் சொல்ல
ReplyDeleteBlogger said...
ReplyDeleteஆமங்க கொஞ்சம் உக்காந்து யோசிச்சாலும், குப்புர படுத்து யோசிப்போர் சங்கத்துல நானும் ஒரு மெம்பருங்க.
இளைய தளபதி சரித்திரத்த இப்படி ஒரு பதிவுல அடக்கிட்டீங்களே.....
ReplyDeleteநன்றி கணேஷ்.
ReplyDelete"தொட்டபேட்டா ரோட்டு மேல முட்ட புரேட்டா
நீ தொட்டுக்க சிக்கன் தரட்டா"
பாடின நம்ம இளைய தளபதிக்கு நம்மால முடிஞ்ச ஒரு சின்ன புகழ் மாலை
ரூம் போட்டு யோசிச்ச உங்கள....
ReplyDeleteமண்டபம் போட்டு சாத்தலாமுன்னு, சாரி...
வாழ்த்தலாமுன்னு பதிவுலகம் சார்பா நினைக்கிறோம்.