Wednesday, May 6, 2009

அண்டத்தில் ஒரு பயணம்


5 வயசாக இருந்தாலும் இராகேஷ் கொஞ்சம் அதி புத்திசாலியாகதான் இருக்கான்.

"அப்பா, சுத்தமா போர் அடிக்குதுப்பா சும்மா ஒரு அண்ட டூர் போகலாமுன்னு இருக்கேன் போய் ஏதாவது புதுசா ஏதாவது பிளானட் கண்டுபிடிக்க போறேன்
அதுக்கு 'ராக்கி 100' பெயர் வைக்கனும் ஏன்னா நான் கண்டுபிடிக்க போர 100 வது பிளானட், ஒரு வேளை என்னுடைய இலட்சியமான கடவுள் இருக்கிற பிளானட்டை கண்டுபிடிச்சாலும் கண்டுபிடிச்சுடுவேன்"

"பக்கத்துலயே ஏதாவது கண்டுபிடிப்பா. நீ ரொம்ம தூரம் போயி கண்டுபிடிக்கிற, சரி எதுல டிராவல் பண்ணுர? யுனிவர்சல் பிளைட்டா இல்ல யுனிவர்சல் ராக்கெட்டா? ரிசர்வ் பண்ணிட்டியா ?"

"இல்லப்பா இந்த தடவ நான் ஸ்கை ஸ்கூட்டர்ல தான் டிராவல் பண்ணபோறேன்"

"ரொம்ப அலுப்பா இருக்குமே?"

"வந்து ரெஸ்ட் எடுத்துகிட்டா சரியாயுடும்"

"சரி, சில இடத்துக்கு போன பியுயல்(fuel) கிடைக்காது அந்த பியுயல் பேக்கை(bag) எடுத்துக்கோ"

"சரிப்பா, நம்ம மாமா அடுத்த வருசத்துல ஜெயில்ல இருந்து விடுதலை ஆயிடுவாருல"

"ஆமா, எதுக்கு கேக்குரா?"

"இல்லை ஜெயில்னா எப்படி இருக்கும் என்னவெல்லாம் பண்ணுவாங்கன்னு கேட்கனும்"

"அதுக்கு ஏன் மாமாவ கேட்கனும், நான் சொல்லுரேன்"

"இல்லப்பா அவர்கிட்ட கேட்டா அனுபவ பூர்வமாக சொல்லுவாருல்ல அதான்"

"அதுக்கேன்ன அவர்கிட்டயும் கேட்டுக்க, நானும் சொல்லுரேன், ஜெயிலுங்கிறது ஒரு குட்டி பிளானட், அந்த கிரகத்துகுள்ள மட்டும் தான் சுத்திகிட்டு ஒருக்கனும். ஒரு வேலையும் குடுக்க மாட்டாங்க, அந்த கிரகம் சுத்தமாவே இருக்காது, பழைய டெக்னாலஜிஸ் தான் யூஸ் பண்ணுவாங்க, ஒரு காலத்துல அந்த கிரகம் தான் மனித இனத்தோட ஆதாரமா இருந்தது, அதுக்கு பேரு பூமி"

"அப்ப அந்த காலத்துல எல்லாம் எல்லாரும் ஜெயில்ல இருந்தாங்கன்னு சொல்லுங்க"

(யாவும் கற்பனையே,தொடரும்)

7 comments:

  1. நல்ல கற்பனை. பாராட்டுக்கள். இது எந்த வருடத்தில் நடக்கும் என தெரிந்து கொள்ள ஆவல்.

    ReplyDelete
  2. நல்ல கற்பனை . தங்கள் கற்பனை பயணம் மேலும் தொடர வாழ்துகள்

    ReplyDelete
  3. பாரட்டுக்கு நன்றி முக்கோணம் சார். இந்த கற்பனை நம்ம காலத்தை விட 2000 ஆண்டுகள் கழித்து நடப்பதாய் வைத்துக்கொள்வோம்.

    ReplyDelete
  4. ஆமா ஜெயில்ல தான் இருக்கோம்!

    ReplyDelete
  5. // ஆமா ஜெயில்ல தான் இருக்கோம்!

    ஆமா வால் அண்ணா என்ன பண்ண? எல்லாம் விதி.

    ReplyDelete