Friday, May 8, 2009

மலர்களே...மலர்களே


ஒருநாள் வாழ்வு தான் உனக்கு
என்று என்னையே நான் சமாதானம்
செய்து கொண்ட நாட்களும் உண்டு.

சவ ஊர்வலத்தில் சாலையில் விழுந்து
கால்களில் அடிபட்டு நீ இறக்கும் கணங்களை
பார்த்து சிரித்த கணங்களும் உண்டு.

என்னவளின் தலை மீது அமர்ந்து
சிரிக்கும் பொழுது திமிர் பிடித்து அலைகின்றாய்
என்று நினைத்த நாட்களும் உண்டு.

கடவுளின் கழுத்தில் கம்பீரமாக
இருக்கும்பொழுது நீ ஆணவம் பிடித்தவள்
என்று எண்ணிய கணங்களும் உண்டு.

சாலையில் சக்கரத்தில் அடிபட்டு அருவருப்பாய்
இறந்த நண்பனின் மேனியை அழகாய்
மாற்றி புத்தி புகட்டினாய்
யாருக்கேனும் நலம் பட இரு.

18 comments:

  1. சவ ஊர்வலத்தில் சாலையில் விழுந்து
    கால்களில் அடிபட்டு நீ இறக்கும் கணங்களை
    பார்த்து சிரித்த கணங்களும் உண்டு.
    //
    பிணத்துடன் பிணமாகும் பூக்கள் --- நல்ல சிந்தனை!!

    ReplyDelete
  2. யாருக்கேனும் நலம் பட இரு.


    அருமை, நல்லதொரு சிந்தனை!!
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. எருமை எருமைன்னு திட்டாம அருமை அருமைன்னு சொன்ன சுட்டி(குரங்கு)க்கு நன்றி.

    ReplyDelete
  4. @thevanmayam said...
    பிணத்துடன் பிணமாகும் பூக்கள்

    நீங்க சொன்ன வரி சூப்பர் தேவா சார்.
    வட போச்சே.

    ReplyDelete
  5. நன்றி கவிக்கிழவன்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கு நன்றி ஜீவராஜ் சார்.

    ReplyDelete
  7. நல்லா எழுதறீங்க boss..!

    ReplyDelete
  8. உங்களை நூறு பெரியார் வந்தாலும் திருத்த முடியாது ....

    ReplyDelete
  9. வாங்க முக்கோணம் சார்.
    ஆத்தா நான் boss ஆயீட்டேன்.

    ReplyDelete
  10. வாங்க சேகர் சார்.
    எதுக்கு சார் இங்க பெரியாரை இழுக்குறீங்க.

    ReplyDelete
  11. hi. Thanks to Dear Vishnu For your comments. I used ur comments in


    http://www.tamilnenjam.org/2009/05/blog-post.html

    ReplyDelete
  12. நன்றி தமிழ்நெஞ்சம்.

    ReplyDelete
  13. என்னெங்க boss உங்க எழுத்தை படிக்கலாம்னு ஆவலோட அடிக்கடி வந்து பார்க்கறேன் இன்னிக்கு பதிவு ஒண்ணும் போடலை? சீக்கிரம் பதியுங்க..வாசகர்கள் ரொம்ப ஆவலோட இருக்கோம்..

    ReplyDelete
  14. // வாசகர்கள் ரொம்ப ஆவலோட இருக்கோம்..//

    என்ன boss என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலயே...

    ReplyDelete
  15. சவ ஊர்வலத்தில் சாலையில் விழுந்து
    கால்களில் அடிபட்டு நீ இறக்கும் கணங்களை
    பார்த்து சிரித்த கணங்களும் உண்டு.

    arumai anna

    ReplyDelete
  16. வாங்க சக்தி. உங்க கவிதைகளை விடவா?

    ReplyDelete