Saturday, May 9, 2009

தொலைக்காட்சி


அந்த குழந்தைகளின் ஆட்டம்
பார்க தடையாயிருந்தாய்
என் நண்பர்களின் அரட்டை
ஆரவாரம் இல்லாமலாக்கினாய்


நிலையான மனது தான்
உன்னிடம் உள்ளதா
கோபம் கொள்கிறாய், திடிரென
கூல் என்கிறாய்
சிரிப்பு காட்டுகிறாய்,சிலநேரத்தில்
அழுக வைக்கிறாய்

நீ ஆண்களுக்கு ஜஸ்வர்யாராயா
இல்லை பெண்களுக்கு மன்மதனா
எந்நேரமும் உன்னை கண்
இமைக்காமல் காண வைக்கிறாய்

உன்னில் தவறில்லை
உன்னை பார்க்கும் மனிதர்கள்
தவறிப்போவதை தவிர.

16 comments:

  1. //உன்னில் தவறில்லை
    உன்னை பார்க்கும் மனிதர்கள்
    தவறிப்போவதை தவிர//

    கடைசி வரிகள்ள தான் நீங்க நிக்கறீங்க தலிவா....

    ReplyDelete
  2. வாங்க முக்கோணம் பாஸ். இப்படி நிக்க வச்சுபுட்டீங்களே

    ReplyDelete
  3. s u p e r

    //நீ ஆண்களுக்கு ஜஸ்வர்யாராயா
    இல்லை பெண்களுக்கு மன்மதனா
    எந்நேரமும் உன்னை கண்
    இமைக்காமல் காண வைக்கிறாய்

    ReplyDelete
  4. ஒரு விடுகதை.

    எங்க வீட்டிலே யாருக்கு அதிக மொழி பேசத்தெரியும் ?

    டீவீ பொட்டி... ஆஹா

    ReplyDelete
  5. அருமை அருமை . சிறந்த சிந்தனை வரிகள்

    "நீ ஆண்களுக்கு ஜஸ்வர்யாராயா
    இல்லை பெண்களுக்கு மன்மதனா
    எந்நேரமும் உன்னை கண்
    இமைக்காமல் காண வைக்கிறாய்"

    தொலைக்காட்சிப் பெட்டியை இப்படியும் வர்ணிகலாம?

    ReplyDelete
  6. வாங்க தமிழ்நெஞ்சம் சார். விடுகதையெல்லாம் பின்னி எடுக்குறீங்க.

    ReplyDelete
  7. அண்ணா
    அருமை. வருகைக்கு நன்றி . படியுங்கள்
    ஜனனம் = ஜென்மம்

    ReplyDelete
  8. // உன்னில் தவறில்லை
    உன்னை பார்க்கும் மனிதர்கள்
    தவறிப்போவதை தவிர //

    மிகவும் ரசித்தேன்......

    தொடர்ந்து எழுதுங்கள்....

    ReplyDelete
  9. வாங்க கண்ணா. தொடர்ந்து எழுத நான் ரெடி படிக்க நீங்க ரெடியா?

    ReplyDelete
  10. வாங்க நம்ம ஆளு. உங்களுடைய பதிவை படிச்சாச்சு. கருத்துரையும் போட்டாச்சு

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி.நீங்களும் நம்ம கம்பெனி மாதிரிதானா பதிவை விட பதில்களே அதிகமா இருக்கு, இருந்தாலும் கவிஜை எல்லாம் எழுதுரீக அப்பு ? எப்பிடி?

    ReplyDelete
  12. // பதில்களே அதிகமா இருக்கு, இருந்தாலும் கவிஜை எல்லாம் எழுதுரீக அப்பு ? எப்பிடி? //

    அது தானா வருது.

    ReplyDelete
  13. நீ ஆண்களுக்கு ஜஸ்வர்யாராயா
    இல்லை பெண்களுக்கு மன்மதனா
    எந்நேரமும் உன்னை கண்
    இமைக்காமல் காண வைக்கிறாய்?///

    தொலைக்காட்சியை இந்த வாங்கு வாங்குறீங்களே!!

    ReplyDelete
  14. வாங்க தேவா சார்.

    ReplyDelete