Thursday, June 18, 2009

என் ஆத்தா மகமாயி

ஓடி விளையாடு பாப்பான்னு
உக்காந்து படிச்சேன்
ஒன்னுக்கு விடும் போது
ஓடி ஓடி திரிஞ்சேன்

ஒன்னாங்கிளாஸ் படிக்கும் போது
தெருவில நிக்கும் பாட்டிக்கு
சத்துணவு உருண்டயை தெரியாம குடுத்தேன்
ஊருக்குள்ள திரிஞ்ச நாய்க்கு
சோறு போடலைன்னு
அம்மாகிட்ட சண்டைக்கு நின்னேன்


காலையில வாத்தியார் சொல்லி
கொட்டு வைச்சவன் பகையாளியா ஆக்கினேன்
சாயங்காலம் நெல்லிகாய் கொடுத்தவுடன்
அவனே என் தோஸ்த்துன்னு ஓடினேன்


தங்கச்சிகிட்ட போட்ட அடி புடி
சண்டை இன்னும் மறக்கல
அண்ணன்கிட்ட திருடி தின்ன லட்டு
நெஞ்ச விட்டு இன்னும் இறங்கல

பக்கத்து வீட்டு மாமா மண்ட சொல்லுது
நான் எறிஞ்ச கல்லை
அப்பா அடிச்ச அடி இன்னும் சொல்லுது
நான் பறிச்ச மாங்காயை

பொறுப்பு கூடி போச்சுன்னு
பொறுமை இழந்து நிக்கிறேன்
வெறுமையான வாழ்க்கையில
வெந்து வெந்து தவிக்கிறேன்


அன்பை தூக்கி சாப்பிட்டு
ஆணவம் முழிச்சி நிக்குது
பொறமை தீயை வச்சுகிட்ட - எனக்கு
சுடுகிற காரணமும் தெரியல


உன் குழந்தைகளுல ஒருத்தன்னு
சொல்லிகிட்டு திரிகிறேன்
குழந்தை மனசை
அழிச்சிட்டு நிக்கிறேன் - என் ஆத்தா மகமாயி

Tuesday, June 16, 2009

சூப்பர்நோவா கண்டுபிடிக்க வயசு என்ன வேணும்?
ஒரு நட்சத்திரம் வெடிச்சு சிதறும் நிகழ்வைத்தான் நோவா இல்ல சூப்பர்நோவான்னு சொல்லுவாங்க.

2008 நவம்பர் மாசம் கரோலின் மூர்(Caroline Moore) என்கிற 14 வயசு மாணவி நம்ம கேலக்ஸில ஒரு சூப்பர்நோவா(Supernova) தோன்றியதை கண்டுபிடிச்சிருக்காங்க.
அதை சமீபத்தில விஞ்ஞானிகள் உறுதி படுத்திருக்காங்க. இதனால குறைஞ்ச வயசில சூப்பர்நோவா கண்டுபிடிச்சவர்ங்கிற பட்டத்தை தட்டி சென்றுள்ளார்.
அந்த இளம் விஞ்ஞானி கண்டுபிடிச்ச சூப்ப்ர்நோவாவுக்கு "SN2008ha" பெயர் வைத்துள்ளனர்.

இதுல இருந்து வருகிற ஒளி நம்ம சூரிய ஒளியை விட 25 மில்லியன் மடங்கு அதிகமாம். வெடிச்சு சிதறின நட்சத்திரத்தின் பாகங்கள் குறைஞ்ச வேகத்துல தான் வருதாம் அதாவது ஒரு மணி நேரத்துக்கு 4.5 மில்லியம் மைல் வேகம் தானாம். சராசரியா இந்த மாதிரி வெடிச்சு சிதறின பாகங்கள் 22 மில்லியம் மைல் வேகதுல வருமாம்.

இதையே ஸ்பீடு கம்மின்னு சொல்லுற ஆளுக நம்ம ஊர் டவுன் பஸ்ஸ என்னான்னு சொல்லுவாங்க.நம்ம ஊரு டவுன் பஸ் 40 கீ.மீ வேகத்துல போனாலே சூப்பர் பாஸ்ட்ன்னு பேர் வச்சுடுவாங்க. இதுல இருந்து என்ன தெரியுது சாதனைக்கு வயது தேவையில்லைன்னு. ஆனா என்ன செய்ய நமக்கு(என்க்கு) தான் ஒன்னும் வரமாட்டீங்குது.

Saturday, June 13, 2009

நான் தம் அடிக்கிற ஸ்டைலை பாத்து
ரவுண்டு ரவுண்டா புகை விட்டு
பெருமிதம் கொள்வேன்
உனக்கு ரவுண்டு கட்ட நான்
ரெடின்னு நினைச்சு நினைச்சு சிரிப்ப

நீ தெரு கோடியில இருந்தாலும்
தேடி வந்து பாப்பேன்
கைமாற எமபுரிக்கு செல்லும் வழியை
கேக்காமலே கொடுப்ப


இது தான் என்னோட கடைசின்னு
சொல்லி சொல்லி அடிப்பேன்
கடைசி வரை நீ இருக்க மாட்டேன்னு
கதறி கதறி அழுவ


வெள்ளையனை வெளியேற்றி
பல காலம் ஆச்சி
வெள்ளையான உன்னை வெளியே
தள்ளி டயடு தான் ஆச்சி


உனக்கு ஆறாம் விரலுன்னு
கவிதை எல்லாம் படைப்பேன்
எனக்கு ஆறா புண்னை
நெஞ்சில் தானே கொடுப்ப


புகையா மறைஞ்சு எனக்கு
சிக்னல் கொடுப்ப
சிக்கல் கொடுத்தவுடன் உன்னை
நான் துறப்பேன்


ஒன்னு ஒன்னா உன்னை
நான் அழிப்பேன்
கடைசில மொத்தமா என் கதையை
நீ முடிப்ப

Saturday, June 6, 2009

அட நம்மளையும் மதிக்கிறாங்கப்பா

அண்ணன் வணங்காமுடி மாதிரி நல்ல மனுசங்க இருக்கிறவரைக்கும் இந்த பூமில மழை பொய்க்காதுங்கோ. என்னையும் தொடர் பதிவுக்கு அழைச்சுகிட்டு வந்த அண்ணன் வணங்காமுடி அவங்களுக்கு என் நன்றிங்க...


1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

என்னுடைய முழு பெயர் விஷ்ணுகுமார். அப்பாவுக்கு பெருமாள் மேல அளவுகடந்த பக்தியால எனக்கு இந்த பெயரை வச்சுட்டாரு. நமக்கும் இந்த பெயர் ரொம்ப பிடிச்சி போச்சுங்கோ.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

முந்தாநேத்து நானும் என் நன்பனும் ஹோட்டல்ல சாப்பிட்டு 86 ரூபா பில்லுக்கு 500 ரூபா குடுத்தோம் அதுக்கு அந்த கடைகாரன் 14 ரூபா மட்டும் மிச்சம் கொடுத்தான். கேட்டா 100 ரூபா தான் கொடுத்தீன்கன்னு சொல்லுரான். நாங்களும் எவ்வளவோ வாய் சண்டை போட்டு பார்த்தோம்,முடியல, அப்ப மனசு எவ்வளவு அழுததது தெரியுமா

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

கோழி கூட நல்லா கிறுக்குமுன்னு ஆறாம் வகுப்பு டீச்சர் என்னோட விரல் முட்டிலே அடிச்சாங்க. ஆனா அவங்க அடிச்ச அடிக்கு பலன் இல்லாம போயிருச்சு

4.பிடித்த மதிய உணவு என்ன?

சோறு கண்ட இடம் சொர்க்கம்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

என்னோட என்ன அலைவரிசை ஒத்து போறவங்கன்னா விடா பிடியா பிடிச்சுக்குவேன் அப்படி இல்லாட்டி ஹாய்...பாய் தான்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா... அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடல் தான் நம்மளோட பேவரிட். சும்மா அலை அலையா வந்துகிட்டு, அலையுல நின்னு கிட்டு இருந்தா சும்மா முன்ன பின்ன தள்ளி விட்டுகிட்டு இருக்கும் பாருங்க.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகத்தை தான்... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வடிவத்தை கொடுத்த இயற்கையின் பரிசை எப்படிங்க பார்க்காம இருக்க முடியும்.
எப்படி தான் அழகா இருக்காங்களோ...

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

யாரு ஏதாவது கேட்டா உடனே இரக்கபடுவது பிடிச்ச விசயம்

பட்டு திருந்தாத ஜென்மம் - இது பிடிக்காத விசயம்

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

31-வது கேள்விக்கான பதிலும் இதுவும் ஒன்னு.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்படில்லாம் யாரும் கிடையாதுங்க.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

கரண்ட வேற கட் பண்ணிட்டானுங்க. நீல கலர் லுங்கியோட உக்காந்திருக்கங்க.

12.என்ன பார்த்து // கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

கொக்கு சைவ கொக்கு ஒரு கெண்ட மீனை கண்டு பாட்டு கேட்டுட்டு இருக்கேங்க.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

பசுமை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

14.பிடித்த மணம்?

மண்ணென்னைய் அடுப்பு பற்ற வைக்கும் பொழுது வருகிற வாசனை ரொம்ப பிடிக்கும்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

முக்கோணம் : இவரோட எழுத்தில எப்பொழுது சமூக அக்கறை இருக்கும். நான் என்ன தான் மொக்கயா பதிவு போட்டாலும் புகழுந்து கமண்ட் அடிக்கிற ரொம்ப ரொம்ப நல்ல மனிதர்.

களப்பிரர் : கொஞ்சமா எழுதுவார் ஆனா ரொம்ப நல்லா எழுதுவார்.

சிவசுப்பிரமணியன் : நிகழ்காலத்தில்ன்னு பெயர் கொண்டு எழுதுபவர். ரொம்ப தன்னபிக்கை உடைய எழுத்துகள் இவரிடம் இருந்து வரும். ஆனா இவர் ஏற்கனவே தொடர் பதிவுல கலந்துகிட்டாரு.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு?

கொஞ்சம் இல்ல ரொம்பவே நக்கல் அடிக்கிற மனிதர். அவர் எழுதினதுல எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு ஆர்குட் அல்ச்சாடியம்


17. பிடித்த விளையாட்டு?

எத்தனை பேரு விளையாடுரோமோ அத்தனை குழி தோண்டிகிட்டு, பந்தை உருட்டி விட்டு யாரோட குழியில விழுதோ அவங்க பந்தை எடுத்து அடுத்தவங்க மேல எறியனும் அதுக்குள்ள அத்த்னை பேரும் ஒரு குறிபிட்ட தூரத்தில இருக்கிற போஸ்ட் கம்பத்தை தொடனும் அப்புரம் அந்த பையன் பந்தை மேலே தூங்கி போட்டு கிட்டே இருப்பான் அதுகுள்ள குழிய வந்து தொடனும், அப்படி எல்லாரும் குழிய தொட்ட்டுட்ட அவனுக்கு ஒரு பிள்ளைன்னு ஒரு சின்ன கல்ல தூக்கி அவன் குழியில போட்டிடுவோம் கடைசில யாரு அதிகமா பிள்ளை வாங்கி இருக்காங்களோ அவங்க தான் தோத்தாலி. ஆமாங்க அதுக்கு பேரு தான் குழி பந்து

18.கண்ணாடி அணிபவரா?

டாக்டரே வேண்டான்னு சொன்னதுக்கு அப்புரமும் கண்ணாடி போடனுமுன்னு சொல்லி ஒரு மூணு மாசம் போட்டுகிட்டு அலைஞ்சேன் அதுக்கப்புரம் அந்த ஆசை விட்டு போச்சுங்க.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

காமெடி படங்கள் என்றால் உயிர்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க படம். அய்யோ! என்னாமா எடுத்திருக்காங்க

பசங்க படமுன்னு சொன்னதுனால ஒரு ப்ளாஸ்பேக். ஒரு சமயம் எங்க ஊருல பயங்கரமான தண்ணி பஞ்சம். அப்ப என்னோட கூட்டாளிகளோட சைக்கிள்ல மூணு நாலு கிலோ மீட்டர் போய் அடி பைப்புல தண்ணி அடிச்சிட்டு கொண்டு வருவேன் அதுக்கு அம்மாகிட்ட நான் வங்கிற லஞ்சம் இருபத்தைந்து பைசா. ஆனா என்ன சும்மா மூணு நாலு மணி நேரம் காத்துகிடந்து அடி பம்புல இரண்டு குடம் தண்ணி அடிச்சிட்டு வருவோம். இதனால பசங்கலெல்லாம் சேர்ந்து ஊருக்கு வெளியில ஆளே இல்லாத அடி பம்பு தேடி கண்டு பிடிப்போம். ஒரு மணி நேரத்தில தண்ணி கொண்டு வந்திருவோம். அதனால எங்க ஏரியாவுல எங்களுக்கு கில்லாடி பசங்கன்னு பேரு.


21.பிடித்த பருவ காலம் எது?

மார்கழி மாசம் நாலு மணிக்கெல்லாம் எந்திருச்சி குளிச்சி கோயிலுக்கு போய் அங்க கொடுக்கிற பொங்கலை இலையில வச்சுகிட்டு அப்படியே எடுத்து சாப்பிட்ட பொங்கல் குறைஞ்சி போயிருமுன்னு தொட்டு தொட்டு நக்கிட்டு வந்த காலம்.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

அட போங்க... பிளாக்கர்ஸ் சொல்லுற மேட்டரே படிக்க முடியாம வதவதன்னு இருக்கு. அப்புரம் எதுக்கு புக்கு.

23.உங்கள் டெஸ்க்டொப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அனிமல்ன்னா அப்படி ஒரு பிரியம் ஏன்னா குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன். சில நேரத்தில ஒரு நாளைக்கு ஆறு ஏழு படம் கூட மாத்துவேன்.

24.பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

ஒரு தொலைபேசி உரையாடலுக்காக நான் காத்திருக்கும் பொழுது அவர் தருகிற செல்போன் ரிங் சப்தம். இளையராஜவின் பாட்டு சப்தம் ரொம்ப பிடிக்கும்

பஸ் கொடுக்கிற ஹாரன் சப்தம் கண்டாலே எரிச்சல் வரும்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

ஒரே ஒரு முறை டெல்லி போயிக்கேன் ஆனா தாஜ்மகால் பாக்கலிங்க.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இது என்னை அவமானபடுத்த வேண்டும் என்றே கேட்க பட்ட கேள்விங்க.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

உள்குத்தோட இருக்கிறவங்களை நம்மால ஏத்துகிற முடியாதுங்கோ.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

"ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்"


29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சுற்றுலா தலம் என்று சொல்ல முடியாது ஆன்மிக தலம்
திருநெல்வேலியிருந்து நாகர்கோவில் செல்லும் பாதையில் உள்ள திருகுறுங்குடி, 90 நிமிடம் ம்லையில் ந்டந்து சென்று பெருமாளை தரிசித்துவிட்டு ம்லை மேல் ஓடுகிற ஆற்றங்கலையில் தனிமையில் அமர்ந்தால் உலகம் மறந்துவிடும்.


30.எப்படி இருக்கணும்னு ஆசை?

காலத்தோட ஓட்டத்தில் கரைந்து போகம இருக்கனும்.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?

யாரவது என்னோட அப்பா அம்மாகிட்ட சொல்லுங்களேன். பையனுக்கு வயசாகிட்டே போகுதுன்னுஇன்னும் சின்ன பிள்ளையாவே நினைக்கிறாங்க.

அய்யயோ சும்மா சொன்னேங்க நீங்க வாட்டுக்க சொல்லிடாதீங்க நான் இன்னும் சின்ன பையனுங்கோ.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்ந்து பாத்தவன் நாடகம்பான்.
வாழ்ந்துகிட்டு இருக்கிறவன் நரகம்பான்
வாழ போறவன் நாளை நமதேம்பான்.

மொத்ததில் வாழ்க்கையை பார்த்தா இடியாப்பம் சும்மா தேங்கா பால் ஊத்தி சாப்பிட்டா அமிர்தம்.

Thursday, June 4, 2009

ஒரு மணி அடித்தால்

சொன்னதை மட்டும் சொல்லி
கிளி பிள்ளை ஆனாய்.
மிஸ்டுகால் மூலம் உரைத்தாய்
கொடுத்ததையே பெறுவாய்.

அக்காவின் குழந்தை பிறப்பை சொல்லி
சந்தோஷத்தை வாரி கொடுத்தாய்
அருமை நண்பனின் இறப்பை சொல்லி
சந்தோஷத்தை எல்லாம் கெடுத்தாய்

இன்கம்மிங் என்றால் மின்சாரம்
மட்டுமே என் செலவு
அவுட்கோயிங் என்றால் என் சம்பளம்
எல்லாம் உன் வரவு

கேட்க இன்பமாய் இருக்கிறது
உன் குரல்
உன் கட்டணத்தை பார்த்து
வரமறுகிறது என் குரல்

உன் பேச்சு கேட்பதால்
செவி கொடுக்க மறுக்கிறான் நண்பன் -
என் பேச்சை கேட்க.
அவன் பேச்சை கேட்க மறுக்கிறேன்
உன் பேச்சை கேட்க.

எத்தனை தொழிற்சாலைகள் உன்னை
உருவாக்கினாலும் ஏனோ உன் தலையாய
பண்புகளை விட மறுக்கிறாய்.
உன்னை பலநேரம் வைத்திருக்கும் மனிதன் தான்
தொலைந்து நிற்கின்றான்