Thursday, June 18, 2009

என் ஆத்தா மகமாயி





ஓடி விளையாடு பாப்பான்னு
உக்காந்து படிச்சேன்
ஒன்னுக்கு விடும் போது
ஓடி ஓடி திரிஞ்சேன்

ஒன்னாங்கிளாஸ் படிக்கும் போது
தெருவில நிக்கும் பாட்டிக்கு
சத்துணவு உருண்டயை தெரியாம குடுத்தேன்
ஊருக்குள்ள திரிஞ்ச நாய்க்கு
சோறு போடலைன்னு
அம்மாகிட்ட சண்டைக்கு நின்னேன்


காலையில வாத்தியார் சொல்லி
கொட்டு வைச்சவன் பகையாளியா ஆக்கினேன்
சாயங்காலம் நெல்லிகாய் கொடுத்தவுடன்
அவனே என் தோஸ்த்துன்னு ஓடினேன்


தங்கச்சிகிட்ட போட்ட அடி புடி
சண்டை இன்னும் மறக்கல
அண்ணன்கிட்ட திருடி தின்ன லட்டு
நெஞ்ச விட்டு இன்னும் இறங்கல

பக்கத்து வீட்டு மாமா மண்ட சொல்லுது
நான் எறிஞ்ச கல்லை
அப்பா அடிச்ச அடி இன்னும் சொல்லுது
நான் பறிச்ச மாங்காயை

பொறுப்பு கூடி போச்சுன்னு
பொறுமை இழந்து நிக்கிறேன்
வெறுமையான வாழ்க்கையில
வெந்து வெந்து தவிக்கிறேன்


அன்பை தூக்கி சாப்பிட்டு
ஆணவம் முழிச்சி நிக்குது
பொறமை தீயை வச்சுகிட்ட - எனக்கு
சுடுகிற காரணமும் தெரியல


உன் குழந்தைகளுல ஒருத்தன்னு
சொல்லிகிட்டு திரிகிறேன்
குழந்தை மனசை
அழிச்சிட்டு நிக்கிறேன் - என் ஆத்தா மகமாயி