Tuesday, April 29, 2008

கூடா நட்பு

மனித மணம் தெரியாத மடையன்
பேசுகிறான் பாசம் பற்றி,
நட்புக்கு இலக்கணம் இவர்கள் என்று
பெருமை பட்டுக்கொள்கிறான்.
ஒருவன் அடைகிறான் துக்கம்,
பாசம் கொண்ட மாமனிதன் நிற்கிறான்
துராத்தில், நாயிடன் போய் நட்பு கொண்டேனே
என்றான், எனோ நமக்கெல்லாம் கேட்டது என்னவோ
பன்றியின் குரல் மட்டும் தான்.

Wednesday, March 19, 2008

தற்கொலை படை




வலி உள்ள இதயம்,

வழி தவறி போகிறது,

வசந்தம் வீசும் என

வாழ்க்கையை தொலைக்கிறது.

Tuesday, February 19, 2008

காரணம் அறியாமல்!!!



கரும் இருட்டு காலையில்,
கன்னி ஒருத்தி கானகம் சென்றால்,
கடமையான தண்ணீர் எடுக்க,
காமுகம் ஒருவன் கள்ளப்பர்வை விடுக்கின்றான்,
காட்டு மிருகம் என நினைக்கிறாள்,
ஊர் கூடி சொல்கிறாள் தான் பார்த்த
கட்டெருமையை,
கனவு கண்டாய்யடி என் ஊர்
கலைந்து ஓடியது, பின்னொரு நாளில்,
காமுகன் தோன்றினான் அவள் முன்னால்,
களவு போனது அவள் பெண்மை,
காணமல் போனது அவளது உயிர்,
கண்ணீர் விட்டு செல்கிறது ஊர்,
காரணம் அறியாமல்,
கருப்பன் அடித்தான் என!!!.

அன்புடன்,
விஷ்ணு

Friday, February 15, 2008

புதுச்சூடி


அறம் செய்ய விரும்பாமல்,
ஆறா சினம் கொண்டு,
நன்றி மறந்து,
வஞ்சகம் பேசி,
புகழ்ந்தாரை இகழ்ந்து வாழ்வான்
இரண்டு கால் கழுதை !!!.

அன்புடன்,
விஷ்ணு.

காதல்


தண்ணீரில் தத்தளிக்கும் மீன் போல் ,
அன்பால் அடிவாங்கும் பிள்ளை போல்,
அறிவால் மதி இழந்த மனிதன் போல் ,
பண்பால் பாழ்பட்ட பாவை போல்,
உன் காதலால் என்னை இழந்தேன்.

காதலுடன்,
விஷ்ணு

Wednesday, February 13, 2008

காதல்

தூக்கி பார்க்க என் காதல் ஒன்றும் கைப்பை அல்ல அது ஒரு கைக் குழந்தை. எழுதி பார்க்க என் காதல் ஒன்றும் காகிதம் அல்ல அது ஒரு கல்வெட்டு. பழகி பார்க்க நான் ஒன்றும் பழக்கவழக்கம் அல்ல உன் பதி.

Wednesday, January 16, 2008

என்னவள்

அவளின் அருமை புரியவில்லை எனக்கு - என் அருகில் அவள் இருக்கின்ற பொழுது.

அவளின் நினைவால் அவஸ்தை படுகிறேன் - அவள் அருகில் நான் இல்லாதா பொழுது.

அன்புடன்,
விஷ்ணு.

காலம்

உலகம் ஓரு நாடக மேடை - இது வாழ்ந்து பார்த்தவன் வசனம்.
உலகம் ஓரு போர்களம் - இது வாழ்த்து கொண்டிருப்பவன் வசனம்.
உலகம் ஓரு விளையாட்டு மைதானம் - இது வாழ்கையில் அடியெடுத்து வைப்பவன் வசனம்.


உலகம் ஓன்று தான் வசனங்கள் தான் வேறு வேறு...

அன்புடன்,
விஷ்ணு.