Tuesday, February 19, 2008

காரணம் அறியாமல்!!!



கரும் இருட்டு காலையில்,
கன்னி ஒருத்தி கானகம் சென்றால்,
கடமையான தண்ணீர் எடுக்க,
காமுகம் ஒருவன் கள்ளப்பர்வை விடுக்கின்றான்,
காட்டு மிருகம் என நினைக்கிறாள்,
ஊர் கூடி சொல்கிறாள் தான் பார்த்த
கட்டெருமையை,
கனவு கண்டாய்யடி என் ஊர்
கலைந்து ஓடியது, பின்னொரு நாளில்,
காமுகன் தோன்றினான் அவள் முன்னால்,
களவு போனது அவள் பெண்மை,
காணமல் போனது அவளது உயிர்,
கண்ணீர் விட்டு செல்கிறது ஊர்,
காரணம் அறியாமல்,
கருப்பன் அடித்தான் என!!!.

அன்புடன்,
விஷ்ணு

No comments:

Post a Comment