Tuesday, February 19, 2008

காரணம் அறியாமல்!!!



கரும் இருட்டு காலையில்,
கன்னி ஒருத்தி கானகம் சென்றால்,
கடமையான தண்ணீர் எடுக்க,
காமுகம் ஒருவன் கள்ளப்பர்வை விடுக்கின்றான்,
காட்டு மிருகம் என நினைக்கிறாள்,
ஊர் கூடி சொல்கிறாள் தான் பார்த்த
கட்டெருமையை,
கனவு கண்டாய்யடி என் ஊர்
கலைந்து ஓடியது, பின்னொரு நாளில்,
காமுகன் தோன்றினான் அவள் முன்னால்,
களவு போனது அவள் பெண்மை,
காணமல் போனது அவளது உயிர்,
கண்ணீர் விட்டு செல்கிறது ஊர்,
காரணம் அறியாமல்,
கருப்பன் அடித்தான் என!!!.

அன்புடன்,
விஷ்ணு

Friday, February 15, 2008

புதுச்சூடி


அறம் செய்ய விரும்பாமல்,
ஆறா சினம் கொண்டு,
நன்றி மறந்து,
வஞ்சகம் பேசி,
புகழ்ந்தாரை இகழ்ந்து வாழ்வான்
இரண்டு கால் கழுதை !!!.

அன்புடன்,
விஷ்ணு.

காதல்


தண்ணீரில் தத்தளிக்கும் மீன் போல் ,
அன்பால் அடிவாங்கும் பிள்ளை போல்,
அறிவால் மதி இழந்த மனிதன் போல் ,
பண்பால் பாழ்பட்ட பாவை போல்,
உன் காதலால் என்னை இழந்தேன்.

காதலுடன்,
விஷ்ணு

Wednesday, February 13, 2008

காதல்

தூக்கி பார்க்க என் காதல் ஒன்றும் கைப்பை அல்ல அது ஒரு கைக் குழந்தை. எழுதி பார்க்க என் காதல் ஒன்றும் காகிதம் அல்ல அது ஒரு கல்வெட்டு. பழகி பார்க்க நான் ஒன்றும் பழக்கவழக்கம் அல்ல உன் பதி.