சொன்னதை மட்டும் சொல்லி
கிளி பிள்ளை ஆனாய்.
மிஸ்டுகால் மூலம் உரைத்தாய்
கொடுத்ததையே பெறுவாய்.
அக்காவின் குழந்தை பிறப்பை சொல்லி
சந்தோஷத்தை வாரி கொடுத்தாய்
அருமை நண்பனின் இறப்பை சொல்லி
சந்தோஷத்தை எல்லாம் கெடுத்தாய்
இன்கம்மிங் என்றால் மின்சாரம்
மட்டுமே என் செலவு
அவுட்கோயிங் என்றால் என் சம்பளம்
எல்லாம் உன் வரவு
கேட்க இன்பமாய் இருக்கிறது
உன் குரல்
உன் கட்டணத்தை பார்த்து
வரமறுகிறது என் குரல்
உன் பேச்சு கேட்பதால்
செவி கொடுக்க மறுக்கிறான் நண்பன் -
என் பேச்சை கேட்க.
அவன் பேச்சை கேட்க மறுக்கிறேன்
உன் பேச்சை கேட்க.
எத்தனை தொழிற்சாலைகள் உன்னை
உருவாக்கினாலும் ஏனோ உன் தலையாய
பண்புகளை விட மறுக்கிறாய்.
உன்னை பலநேரம் வைத்திருக்கும் மனிதன் தான்
தொலைந்து நிற்கின்றான்