Tuesday, May 5, 2009
மகாலிங்க மலை கருப்பண்ண சாமி
மகாலிங்க மலை பற்றி தெரியனுமா இங்க படிச்சு தெரிஞ்சுக்கோங்க
நான் எம்.சி.ஏ. முதலாமாண்டு படிக்கும் பொழுது, காலேஜ்ல டூர் போனாங்க. சில பல காரணங்களால் நான் டூர் போகலை. அதே போல சில பசங்களும் டூர் போகலை.
அதுல மூணு பேர் மட்டும் மாகலிங்க மலைக்கு போகலாமுன்னு பிளான் பண்ணினோம். எங்க ஊர்ல இருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில இருந்தாலும் நான் போனதில்லை அதனால போகலாமுன்னு முடிவு செஞ்சு பஸ் ஏறி வற்றாயிருப்பு ஊருக்கு போயச்சு.
மலை மேல அன்னதானம் போடூவாங்க என்பது தெரியும், இருந்தாலும் வழி பயணத்தில சாப்பிட பிஸ்கட்டும், முறுக்கும் வாங்கிட்டோம்.
மேல சில கடைகள் இருந்தாலும் ஒரு ரூபாய் அதிகமா தான் விப்பாங்கன்னு என் நண்பன் சொன்னதுனால அத மிச்சபடுத்த வற்றாயிருப்பு ஊருலயே வாங்கிகிட்டோம்(படிக்கிற காலத்துல வீட்டுல குடுக்கிற ஜந்து பத்து ரூபாய் தான் நம்ம சொத்து). மினி பஸ் ஏறி நாலு ரூபாய் டிக்கட் எடுத்து ம்லை அடிவாரம் போய் சேர்ந்தாச்சு அந்த இடத்துக்கு பெயர் தாணிபாறை. கடைசி பஸ் மாலை 6:45க்குன்னு கண்டக்டர் அண்ணன்கிட்ட கெட்டு தெரிஞ்சுகிட்டோம். மலை அடிவாரத்துல இருக்கிற கருப்பண்ண சாமிய கும்பிட்டு மலை ஏற ஆரம்பிச்சோம், என்னால சுத்தமா ஏற முடியல ரெண்டு நிமிசம் நடப்பேன் பத்து நிமிசம் உட்காந்திருப்பேன். அப்பதான் என் நன்பன் கீழ உக்காரதாடா அழுப்பா இருந்தா மலையிலயே அப்படியே சாஞ்சுக்கோன்னு சொல்ல நானும் அப்படியே செய்ய கொஞ்சம் ஆறுதலா இருந்தது, இருந்தாலும் ரொம்பவே கஷ்டபட்டு தான் ஏறிகிட்டு இருந்தேன். ஆனா பாட்டி மார்களும் தாத்தாமார்களும் எந்த கஷ்டமும் இல்லாமல் ஏறிகிட்டு இருந்தாங்க. சில பேர் ஏற முடியாம கீழ போக ரெடியாகிட்டு இருந்தாங்க.பாதி மலை தாண்டி இருப்போம், இடையில கோரக்கர் சித்த்ர் குகை ஒன்னு இருக்கு, அருகிட்ட போய் ஏதாவது தப்பு செஞ்சிருந்தா மன்னிச்சுக்கோங்கன்னு வேண்டிக்கிட்டு கொஞ்ச நேரம் அந்த இடத்துல உட்காந்துகிட்டு அப்புறம் நடக்க ஆரம்புச்சோம், என்ன ஒரு ஆச்சரியம் கொஞ்சம் கூட அலுப்பு தெரியல. மலைக்கு மேலே ஏறியாச்சி நேர சுந்தர மாகலிங்கத்தை கும்பிட்டு,சாப்பிடலாமுன்னு அன்ன சத்திரத்துக்கு போனோம் எல்லாம் காலியா போச்சுன்னு சொன்னவங்க, களி சாப்பிடுவீங்களாப்பான்னு கேட்டாங்க நாங்களும் சாப்பிடுவோமுன்னு சொல்ல பத்து நிமிசத்துல தயார் பண்ணீறோமுன்னு சொல்லி களி செய்ய ஆரம்பிச்சாங்க, தயாரன உடனே எங்களை கூப்பிட்டு உக்கார சொல்லி களி போட்டாங்க. சரியான பசி என்பதால் முதல் ரவுண்டு வேகமா சாப்பிட்டேன், நான் சாப்பிட்ட வேகத்தை பார்த்து அங்க இருந்தவங்க ரெண்டாவது ரவுண்டு வச்சுபுட்டாங்க என்னால சாப்பிட முடியல பக்கத்துல இருந்த என் அருமை நண்பன் ரசிச்சு ருசிச்சு சாப்புட்டு இருந்தான் அவனுக்கே தெரியாம அவன் தட்டுல களிய வச்சுபுட்டு கை கழுவ போயிட்டேன். அப்புரம் சந்தன மாகலிங்க சாமிய தரிசனம் செஞ்சுட்டு, கொஞ்ச தூரம் மலை பக்கம் போவோமுன்னு நடக்க ஆரம்பிச்சோம் . அங்க வன தேவதைகள் நிறைய இருக்கு, நாங்களும் இரண்டு வனதேவதைகளை கும்பிட்டு. அடுத்த வனதேவதையை தேட போகும் போது ஒரு பெரியவர் என்னடா பண்ணுறீங்க. ஒங்கள மாதிரி ஆளுக வன தேவதைகள் கும்பிட கூடாதுடா, கும்பிட்டா கூட வந்துரும், அப்புரம் உங்க ஊருல கோவில் கட்ட சொல்லும் திருவிழா நடத்த சொல்லும், முடியுமா உங்களாள" ன்னு கேட்க எங்க மூணு பேருக்கு ஆட்டம் குடுக்க ஆரம்பிச்சிருச்சு. ஏன்னா இதுக்கு முன்னாடி ரெண்டு வனதேவதைகளை கும்புட்டுவிட்டோம், அந்த தேவைதைகள் கூட வந்துட்டா இருந்தாலும் பலா மரத்து அடி கருப்பண்ண சாமிகிட்ட வேண்டிக்கிருவோம் நினைச்சு அத பத்தி மறந்துடோம். மணி அஞ்சு அரை மணி இருக்கும் சரி கிளப்புவோமுன்னு சுந்தர மாகலிங்கத்தை கும்பிட்டு வெளியில வந்தா ஒரு பாட்டிமா
'எங்கப்பா கிளப்பிட்டீங்கன்னு கேட்டாங்க, நாங்களும் கீழ போறோம்ன்னு சொல்ல, கையில தீ பந்தம் வச்சுருக்கீங்கலான்னு கேட்க இல்லைன்னு சொன்னோம், அப்ப காலையில போங்க. காட்டெருமைங்க நிறைய அழையுதுங்க, அப்புறம் பாதை வேற சரியா தெரியாது' ன்னு சொன்னாங்க,இதையே நிறையா பேர் சொல்ல எங்களுக்கு கொஞ்சம் பயம் தட்டீருச்சி இருந்தாலும் வீட்டுல எங்கள தேடுவாங்கன்னு சொல்லீட்டு கிளம்பினோம். பலாஅடியான் கருப்பண்ண சாமிகிட்ட 'நல்ல படியா எங்களை கீழ ஏறக்கி விட்டுருப்பா'ன்னு வேண்டிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சோம். நடக்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலே இருட்ட ஆரம்பிச்சிருச்சு. ஒரு சமயத்துல சுத்தமா வழியே தெரியல. ஆளுக்காளுக்கு ஒரு வழிய காட்ட, நான் ஒரு வழிய காட்ட அந்த வழியில போனா அறாவது அடியில நூறு அடி பள்ளம் கொஞ்சம் கவனம் தவறி இருந்தாலும் சிவன் மலையில இருந்து கைலாயத்திற்க்கு போயிருப்போம். மனசு முழுசும் பயம் தான், விடிஞ்சதுக்கு அப்புரம் போயிக்கிலாமுன்னு அப்படியே அந்த இடத்துலயே உக்காத்துட்டோம். கருப்பண்ண சாமியை கொஞ்சம் திட்டிட்டு இருந்தோம், ரெண்டாவது நிமிசத்துல கண்ணு மின்னிகிட்டு ஒரு உருவம் மலை சரிவுல இருந்துச்சு அத பார்த்தும் எங்க மூணு பேரும் ஒட்டிகிட்டு உக்காத்துகிட்டோம். கடைசில பார்த்தா கருப்பு கலருல ஒரு நாய் வந்து நின்னு எங்கள பார்த்து குலைக்க ஆரம்பிச்சு. நாங்க அப்படியே உக்காந்துகிட்டு இருந்தோம், அந்த பைரவர்(நாய்ன்னு சொல்லுவதை விட பைரவருன்னு சொன்ன நல்லாயிருக்குமுன்னு தோனிச்சு) நடக்க ஆரம்பிச்சாரு. அப்பதான எங்க மூணு பேருல ஒருத்தன் ஒருவேளை நமக்கு வழி காட்டுதோ என்னமோன்னு சொல்ல நாங்களும் அவர் பின்னாடி நடக்க ஆரம்பிச்சோம். அவரும் வழி காட்ட நாங்களும் நடக்க ஆரம்பிச்சோம்.
ஏதாவது வித்தியாசமா சப்தம் கேட்டா அந்த பைரவர் எங்க குறுக்க வந்து நின்னுடுவாரு. அப்புறம் கொஞ்ச தூரம் அவர் மட்டும் போய் பார்த்து சிக்னல் குடுப்பாரு நாங்க மூணு பேரும் அவர் பின்னாடி போவோம். இடையில குதிரை ஏற்றம்முன்னு ஒரு இடம் வரும் அங்க ஒரு நீரோடை இருக்கு அதுல கொஞ்சம் தண்ணீர் அதிகமா தான் போய்கிட்டு இருந்துச்சு. காலையில வரும் பொழுது இடையில இருந்த கல்லுல ஏறி ஒரு வழிய வந்துட்டோம். ஓடையில இறங்கி நடந்த இடுப்பு வரைக்கும் தண்ணீர் இருக்கும் இருந்தாலும் ஏறங்கி நடக்க பயம், கல்லும் இருட்டுல சரியா தெரியல. நாங்க மூணு பேரும் எருமை மாடுக மாதிரி நின்னுகிட்டு இருந்தோம், எங்க கூட்டிட்டு வந்த பைரவர் ஓடைய தாண்டி நடந்து போய்கிட்டு இருந்தாரு, கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புரம் திருப்பி பார்த்தாரு, நாங்க திரு திரு முழிச்சுகிட்டு இருந்த பார்த்தவரு ரெண்டு தடவ குலைச்சாரு(ஒரு வேளை கெட்ட வார்த்தையில திட்டிருப்பாரோ?) அப்புரம் ரெண்டு தடவ ஓடைய தாண்டி காட்டுனாரு அப்புரம் நாங்களும் தாண்டி வந்துட்டோம்,இப்படி ஏழு கிலோ மீட்டர் எங்க கூட வந்தாரு, கடைசில கீழ இருக்கிற கருப்பண்ண சாமி கோவில் வந்துருச்சி நாங்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுட்டு கருப்பண்ண சாமிகிட்ட தேங்க்ஸ் சொல்லிட்டு நம்மள காப்பாத்தி கூட்டி வந்த பைரவருக்கு பிஸ்கட் போடுவோமுன்னு திருப்பி பார்த்தா தலைவர காணோம் நாங்களும் சுத்தி எல்லா இடத்துலயும் தேடி பார்த்துட்டு கடைசில கருப்பண்ண சாமிய பார்த்தா எப்பவும் உக்கிரமா இருக்கிறவரு எங்கள பாசத்தோட பார்த்து சிரிச்ச மாதிரி இருந்துச்சு
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான ஆன்மீக அனுபவம்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
சிவா சார் சதுரகிரி மலைக்கு வந்ததுண்டா?
ReplyDeleteஅனுபவத்தை மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். ஆர்வத்துடன் படித்தேன்.
ReplyDelete{{நாங்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுட்டு கருப்பண்ண சாமிகிட்ட தேங்க்ஸ் சொல்லிட்டு நம்மள காப்பாத்தி கூட்டி வந்த பைரவருக்கு பிஸ்கட் போடுவோமுன்னு திருப்பி பார்த்தா தலைவர காணோம் நாங்களும் சுத்தி எல்லா இடத்துலயும் தேடி பார்த்துட்டு கடைசில கருப்பண்ண சாமிய பார்த்தா எப்பவும் உக்கிரமா இருக்கிறவரு எங்கள பாசத்தோட பார்த்து சிரிச்ச மாதிரி இருந்துச்சு}}
அதுவும் கடைசி பாரா நன்றாக முடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!
Blogger said...
ReplyDelete//அதுவும் கடைசி பாரா நன்றாக முடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!//
வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்.
:)
ReplyDelete