Wednesday, April 29, 2009
தன்மான மொட்டு
ஆறாம் வகுப்பு படிக்கும் இரமேஷ், காலையிம் எழுந்ததும் கொஞ்சம் கலக்கமாகவே இருந்தான். கடந்த ஒரு வாராமாக அறிவியல் புத்தகம் வாங்க வேண்டும் என்று அடம்பிடிக்க முடிந்ததே தவிர அவ்னால் அந்த காரியத்தை நிறைவேற்ற முடியவில்லை. நேற்று இரவு ஊரே கூடும் அளவுக்கு ஒரே அழுகை முடிவு நான்கு அடிகளுன்னு தூங்க போனவன் இப்பதான் எழுந்தான். அம்மாவிடம் போய்
"மாமாகிட்ட தான் நிறைய காசு இருக்கில்ல அவருக்கிட்ட போய் வாங்கிரேன்"
"ஏய் அப்பாவுக்கு அசிங்கம் டா அது, இன்னைக்கு ஸ்கூலுக்கு போ நாளைக்கு அப்பாவ வாங்கி தர சொல்லுரேன்"
வாத்தியார் வெளியில் நிற்க வைத்தது தன் சக நண்பர்கள் தன்னை பாவமாகவும் ஏளனமாகவும் பார்த்தது எல்லாம் கண்முன்னால் தெரிந்தது.
இவர்கள் தன்மான பிரச்சனையில் இரமேஷின் தன்மானம் கொஞ்சம் அதிகமாகத்தான் நசிங்கி போனது.
இன்னைக்கு ஸ்கூலுக்கு போக வேண்டாம் அறிவியல் புத்தகம் வாங்கி தந்ததும் போவோம் என்று நினைத்து வயல் காடுகளின் பக்கம் போய் விட்டான்
அங்கே வயல்களில் தண்ணீர் பாய்ச்சுபவனும் நிரந்தர வேலைகள் ஏதும் இல்லாத மாதவன் இரமேஷை பார்த்துவிட்டான்.
"என்னாடா இங்க சுத்திக்கிட்டு இருக்க" என்று அதட்ட
நடந்தவற்றையும், தான் எடுத்த முடிவையும் இரமேஷ் கூற, சரியாக பட்டது மாதவனுக்கு,தன்னுடனே இருக்குமாறு கூறினான் மாலையில் சரியாக வீடு திரும்பவும் வழி செய்து கொடுத்தான்
வாரம் ஓன்று கடந்தது. அப்பா அறிவியம் புத்தகம் வாங்கி வந்தார் மகிழ்ச்சியுடன்
அதை வாங்கிய இரமேஷ்க்கு சோகம் தழுவியது 'இன்றைக்கு ஸ்கூக்கு போகனுமா' என்று.புத்தக பை எடுத்துக்கொண்டு பள்ளி நோக்கி நடந்தான். கால்கள் வேகத்தை குறைத்தது கண்களால் சுற்றும் முற்றும் பார்த்தான்.
தன்னை போல் வகுப்பறையில் தன்மானம் இழந்த கதிரேஷன் வந்தான் அவனிடம் அறிவியல் புத்தகத்தை கொடுத்துவிட்டு நடந்தான் வயல் பக்கங்கள் நோக்கி.
என்ன அங்கே இன்னொறு மாதவன் உருவாக்க பட்டுகொண்டிருக்கிறான்.
Subscribe to:
Post Comments (Atom)
தன்மானம் சிறுவர்களுக்கும் இருக்கும் என்பதையும், இரமேஷ் தடம் மாறிப் போக நேர்வதையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி அக்கா
ReplyDeleteவெளியில் சொல்ல தெரியாமல் வேதனைப்படும் சிறுவர்களின் மன நிலையை அருமையாக விளக்கி உள்ளீர்கள். தங்கள் பதிவுகள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல கதை
ReplyDelete