Saturday, April 25, 2009
சுதந்திரம் என்னும் தனிதன்மை
"ஏம்மா நமக்கு நல்ல சாப்பாடு கிடைக்குது நாம பண்ணுற தொழிலை மக்கள் ஏத்துகிறாங்க, நம்மலால மக்கள் சந்தோஷமா இருக்காங்க அப்புறம் ஏம்மா எப்ப பார்த்தாலும்
சோகமா இருக்கீங்க"
"நாமலாவது பரவாயில்லை இன்னொறு இடம் இருக்கு அதுல சும்மா தூங்கிட்டு இருந்தாலே சாப்பாடு கிடைக்கும் அது நம்மல விட மோசம்"
"ஏம்மா சும்மா இருந்தாலே சுகமா இருக்கும்முன்னா நல்லது தானே?"
"அது இல்லப்பா வாழ்க்கை நமக்குன்னு ஒரு தனிதன்மை இருக்கு நமக்கான இடம் இது கிடையாது. உங்க தாத்தா சுதந்திரம் தான் ஒவ்வொறு ஜிவனுக்கும் முக்கியம் முக்கியமுன்னு சொல்லி சொல்லியே செத்து போயிட்டாரு ஏன்னா சுதந்திரம்னா என்னனு அவருக்கு தெரியும், சுதந்திரமா இருந்தவரை இங்க கொண்டுவந்து விட்டதுனால நொந்தே செத்தாரு. இது அடிமை வாழ்க்கைப்பா. உன் தலைமுறையாவது சுதந்திரமா இருக்கனுமுன்னு தெய்வமா போன உன் தாத்தாகிட்ட தினமும் வேண்டிகிறேன், நீ என்னடானா"
தாய் யானை மகன் யானையிடம் சர்க்கஸ் கூடாரத்தில் தன்னுடைய வேலையை (கலை நிகழ்ச்சியை) முடித்துவிட்டு உரையாடிக்கொண்டது.
Subscribe to:
Post Comments (Atom)
மனிதனை நல்லா சிந்திக்க வைக்கறீங்க
ReplyDeleteவாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா சார்.
ReplyDeleteநல்ல உரையாடல்...
ReplyDeleteவாழ்த்துக்கள்
நன்றி அண்ணன்.
ReplyDelete//தாய் யானை மகன் யானையிடம் சர்க்கஸ் கூடாரத்தில் தன்னுடைய வேலையை (கலை நிகழ்ச்சியை) முடித்துவிட்டு உரையாடிக்கொண்டது. //
ReplyDeleteவெளிநாட்டுக்கு உடன் அழைத்துச் செல்லும் பெற்றோர்களின் நிலையும் இதே தான், அவங்க உலகம் பேரக் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, டிவி என ஒரே வீட்டினுள் முடங்கிவிடும்.
நல்ல பதிவு..
ReplyDeleteஅருமை..
கோவி.கண்ணன் said...
ReplyDelete// வெளிநாட்டுக்கு உடன் அழைத்துச் செல்லும் பெற்றோர்களின் நிலையும் இதே தான், அவங்க உலகம் பேரக் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, டிவி என ஒரே வீட்டினுள் முடங்கிவிடும். ..
மிக சரியாக சொன்னீர்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
திரு கோவி.கண்ணன்
வாழ்த்துக்கு நன்றி லோகு.
ReplyDeleteசும்மா இருப்பது சுகமா?
ReplyDeleteசுதந்திரமா இருப்பது சுகமா?
ஆனைகளின் உரையாடல் மூலம் உணர்த்தியிருக்கும் விதம் அருமை.