
பகட்டான உடை அணிந்து வந்தால்
உனக்கு பெயர் சொகுசு
பரிதாபமாய் நீ வந்தால்
உனக்கு இல்லை மவுசு.
அரசு புகை பிடிக்க தடை போட்டு
பல காலம் ஆச்சு
அதை கடை பிடிக்க உனக்கு மட்டும்
விதி விலக்குன்னு பேச்சு.
உனக்குள்ள எனக்கு பிடிச்சது
ஜன்னல் ஓர சேரு
சாலையில் நீ எனக்கு எப்பொழுதும்
தேவலோக தேரு
கரெக்ட் டைமுக்கு டிரைவர் அண்ணன்
கொண்டு வரமாட்டாரு உன்னை
ரைட் தான் கண்டெக்டர் அண்ணன்
சொல்லிடுவாரு நான் ஏறுவதற்க்கு முன்னே
பல நேரம் கேக்க மாட்ட
பிரேக் பேச்ச
சில நேரம் வாங்கிடுவ
எங்க மூச்ச
பல ஊர பாத்தாலும் இல்லை
உனக்கு அலுப்பு
சில ஊருக்கு போக மாட்டீங்கிற
ஏன் இந்த வெறுப்பு
நீ எப்பொதும் எனக்கு
கனவு கன்னி
உனக்காக காத்திருந்து எனக்கு
தவிக்குது தண்ணி.