Thursday, June 4, 2009

ஒரு மணி அடித்தால்

சொன்னதை மட்டும் சொல்லி
கிளி பிள்ளை ஆனாய்.
மிஸ்டுகால் மூலம் உரைத்தாய்
கொடுத்ததையே பெறுவாய்.

அக்காவின் குழந்தை பிறப்பை சொல்லி
சந்தோஷத்தை வாரி கொடுத்தாய்
அருமை நண்பனின் இறப்பை சொல்லி
சந்தோஷத்தை எல்லாம் கெடுத்தாய்

இன்கம்மிங் என்றால் மின்சாரம்
மட்டுமே என் செலவு
அவுட்கோயிங் என்றால் என் சம்பளம்
எல்லாம் உன் வரவு

கேட்க இன்பமாய் இருக்கிறது
உன் குரல்
உன் கட்டணத்தை பார்த்து
வரமறுகிறது என் குரல்

உன் பேச்சு கேட்பதால்
செவி கொடுக்க மறுக்கிறான் நண்பன் -
என் பேச்சை கேட்க.
அவன் பேச்சை கேட்க மறுக்கிறேன்
உன் பேச்சை கேட்க.

எத்தனை தொழிற்சாலைகள் உன்னை
உருவாக்கினாலும் ஏனோ உன் தலையாய
பண்புகளை விட மறுக்கிறாய்.
உன்னை பலநேரம் வைத்திருக்கும் மனிதன் தான்
தொலைந்து நிற்கின்றான்

14 comments:

  1. என்ன யாராவது பரிசளித்த அலைபேசியா!!!

    ReplyDelete
  2. இல்ல சிவா சார் சொந்த தொல்லைபேசி.

    ReplyDelete
  3. கடைசி வரை செல்பேசின்னு ஒரு இடத்தில் கூட சொல்லாமல் புரிய வச்சீங்க பாருங்க, அங்க தான் நீங்க நிக்கறீங்க விஷ்ணு.. ..!
    " 'செல்' போனா சொல் போச்சு!!" ன்னு அந்த காலத்துல சும்மாவா சொன்னாங்க?

    ReplyDelete
  4. வாங்க முக்கோணம் பாஸ்
    புல்லரிக்க வைக்கிறீங்க.

    ReplyDelete
  5. நம்ம முக்கோணம் பதிவை படிக்கறவங்களும் ஃபுல்லா அரிக்க வைக்கிறேன்னு தான் சொல்றாங்க..

    ReplyDelete
  6. இப்போ அது மட்டும் இல்லைனா!
    ஒரு கையே இல்லாத மாதிரி தெரியுமுல்ல!

    ReplyDelete
  7. மனிதனின் உடலில் ஒரு பாகமாக மாறக்கூடும் வாய்ப்புள்ளது விஷ்ணு

    ReplyDelete
  8. பொறக்கும் போதே.. காதுகுள்ள செல்போன் அட்டேச் பன்னுற, டெக்னாலஜி வரும்!
    கவிதை நன்று!

    ReplyDelete
  9. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மயாதி.

    ReplyDelete
  10. ஆமா வால் அண்ணா 'கால்' பண்ணுற மேட்டர் இப்ப கை போலச்சு

    ReplyDelete
  11. வசந்த் ஏற்கனவே அது உடலின் ஒரு பகுதி ஆயிருச்சே...

    ReplyDelete
  12. வாங்க கலை. டெக்னாலஜி வேற வரணுமா என்ன? இப்பவே பலரோட காதுலயே தான் செல்போன் அட்டாச் ஆகி தான் இருக்கு.

    ReplyDelete
  13. விஸ்ணு அவர்களே,

    எனது பிளாகில் நான் பின்னூட்ட மட்டுறுத்தல் வைத்து கொள்ளததலும் - எனது பிளாகை வெகு அரிதாகவே நான் பார்ப்பதாலும் ( தொடர்ச்சியாக மற்றவர்களின் பிளாகை தமிழ் மனம், யாகூ ரீடர் வழியாக பார்க்கும் பொழுதும் ) தங்களது அழைப்பை இன்று தான் கவனிக்க நேர்ந்தது. தங்களது அழைப்பிற்கும், என்னை பற்றிய பாராட்டுரைக்கும் மிக்க நன்றி.

    இப்பொழுது மிகவும் தாமதாகி விட்டதால், இனிமேல் இந்த முப்பத்தி இரண்டு கேள்வி தொடருக்கு வேலை இல்லை என்றே நினைக்கிறேன்.

    தங்களது கவிதைகளை ரசித்தேன்! மேலும் சிறப்பாக எழுத வாழ்த்துக்கள் .

    ReplyDelete