Saturday, June 13, 2009

நான் தம் அடிக்கிற ஸ்டைலை பாத்து




ரவுண்டு ரவுண்டா புகை விட்டு
பெருமிதம் கொள்வேன்
உனக்கு ரவுண்டு கட்ட நான்
ரெடின்னு நினைச்சு நினைச்சு சிரிப்ப

நீ தெரு கோடியில இருந்தாலும்
தேடி வந்து பாப்பேன்
கைமாற எமபுரிக்கு செல்லும் வழியை
கேக்காமலே கொடுப்ப


இது தான் என்னோட கடைசின்னு
சொல்லி சொல்லி அடிப்பேன்
கடைசி வரை நீ இருக்க மாட்டேன்னு
கதறி கதறி அழுவ


வெள்ளையனை வெளியேற்றி
பல காலம் ஆச்சி
வெள்ளையான உன்னை வெளியே
தள்ளி டயடு தான் ஆச்சி


உனக்கு ஆறாம் விரலுன்னு
கவிதை எல்லாம் படைப்பேன்
எனக்கு ஆறா புண்னை
நெஞ்சில் தானே கொடுப்ப


புகையா மறைஞ்சு எனக்கு
சிக்னல் கொடுப்ப
சிக்கல் கொடுத்தவுடன் உன்னை
நான் துறப்பேன்


ஒன்னு ஒன்னா உன்னை
நான் அழிப்பேன்
கடைசில மொத்தமா என் கதையை
நீ முடிப்ப

18 comments:

  1. This is really super! but, the lable (second lable) you given is not right! Hope you can chage it as some thing usefull.. or for health!
    but...... each words were very well choosen!

    ReplyDelete
  2. Thanks Haja for visit and comment about the post.

    ReplyDelete
  3. அருமையான கவிதை...
    வாங்க ஒரு தம் போட்டுகிட்டே
    அதை பத்தி பேசுவோம்...

    ReplyDelete
  4. @கலையரசன்
    கலை இன்னைக்கு கோட்டா முடிஞ்சு போச்சி

    ReplyDelete
  5. எப்படிங்க..இப்படி கலக்குறீங்க..? அது தானா வருதுன்னு நினைக்கிறேன்..அருமை..!

    ReplyDelete
  6. வாங்க முக்கோணம்.
    நீங்க பாரட்டுறீங்களா..இல்ல ஓட்டுறீங்களா...

    ReplyDelete
  7. எல்லாரும் சரக்கு கவிதை எழுதும்போது நீங்க வித்தியாசமா சிகரெட் கவிதை எழுதி இருக்கீங்க..

    அருமை :)

    //கலையரசன் said...
    அருமையான கவிதை...
    வாங்க ஒரு தம் போட்டுகிட்டே
    அதை பத்தி பேசுவோம்...//

    ஏண்டா கலை ஓசில தம் போடுற பழக்கம் இன்னும் போலையா??

    ReplyDelete
  8. Kanna said...
    // ஏண்டா கலை ஓசில தம் போடுற பழக்கம் இன்னும் போலையா?? //

    கலை நீங்க நம்ம கோஷ்டிதானா

    ReplyDelete
  9. தம் பிடிச்சு படிச்சேனுங்க

    கவித கவித

    ReplyDelete
  10. //தம் பிடிச்சு படிச்சேனுங்க//

    வாங்க வசந்த். தம் பிடிச்சா தப்பில்லை. தம் அடிச்சாதான் தப்பு.

    ReplyDelete
  11. உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ்

    என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

    இதில் குறிப்பாக
    1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
    2-புத்தம்புதிய அழகிய templates
    3-கண்ணை கவரும் gadgets
    ஒரு முறை வந்து பாருங்கள்
    முகவரி http://tamil10.com/tools.html

    ReplyDelete
  12. படிக்கும் போது கஷ்டமா தான் இருக்கு, ஆனாலும் ஒரு தம்ம போட்டு வந்து பின்னூட்டம் போட்டா தான் கும்முன்னு இருக்கும்!

    ReplyDelete
  13. வாங்கோ வால் அண்ணா. அட உங்கள மாதிரி தான் நானும் மனசு சொல்லுறத கேக்குறவன்

    ReplyDelete
  14. Nice one..

    Samora

    ReplyDelete
  15. Hai,

    Sir Its Realy Very good

    Machan Filter Vacha Sigrate Adida OK

    ReplyDelete
  16. //.. இது தான் என்னோட கடைசின்னு
    சொல்லி சொல்லி அடிப்பேன்..//

    எனக்கு பிடித்த வரிகள்..

    //.. வால்பையன் said...
    ஒரு தம்ம போட்டு வந்து பின்னூட்டம் போட்டா தான் கும்முன்னு இருக்கும்! ..//

    அங்கதான் நிக்குறாரு நம்ம தல..

    ReplyDelete