
"ஏம்மா நமக்கு நல்ல சாப்பாடு கிடைக்குது நாம பண்ணுற தொழிலை மக்கள் ஏத்துகிறாங்க, நம்மலால மக்கள் சந்தோஷமா இருக்காங்க அப்புறம் ஏம்மா எப்ப பார்த்தாலும்
சோகமா இருக்கீங்க"
"நாமலாவது பரவாயில்லை இன்னொறு இடம் இருக்கு அதுல சும்மா தூங்கிட்டு இருந்தாலே சாப்பாடு கிடைக்கும் அது நம்மல விட மோசம்"
"ஏம்மா சும்மா இருந்தாலே சுகமா இருக்கும்முன்னா நல்லது தானே?"
"அது இல்லப்பா வாழ்க்கை நமக்குன்னு ஒரு தனிதன்மை இருக்கு நமக்கான இடம் இது கிடையாது. உங்க தாத்தா சுதந்திரம் தான் ஒவ்வொறு ஜிவனுக்கும் முக்கியம் முக்கியமுன்னு சொல்லி சொல்லியே செத்து போயிட்டாரு ஏன்னா சுதந்திரம்னா என்னனு அவருக்கு தெரியும், சுதந்திரமா இருந்தவரை இங்க கொண்டுவந்து விட்டதுனால நொந்தே செத்தாரு. இது அடிமை வாழ்க்கைப்பா. உன் தலைமுறையாவது சுதந்திரமா இருக்கனுமுன்னு தெய்வமா போன உன் தாத்தாகிட்ட தினமும் வேண்டிகிறேன், நீ என்னடானா"
தாய் யானை மகன் யானையிடம் சர்க்கஸ் கூடாரத்தில் தன்னுடைய வேலையை (கலை நிகழ்ச்சியை) முடித்துவிட்டு உரையாடிக்கொண்டது.