Tuesday, June 16, 2009

சூப்பர்நோவா கண்டுபிடிக்க வயசு என்ன வேணும்?




ஒரு நட்சத்திரம் வெடிச்சு சிதறும் நிகழ்வைத்தான் நோவா இல்ல சூப்பர்நோவான்னு சொல்லுவாங்க.

2008 நவம்பர் மாசம் கரோலின் மூர்(Caroline Moore) என்கிற 14 வயசு மாணவி நம்ம கேலக்ஸில ஒரு சூப்பர்நோவா(Supernova) தோன்றியதை கண்டுபிடிச்சிருக்காங்க.
அதை சமீபத்தில விஞ்ஞானிகள் உறுதி படுத்திருக்காங்க. இதனால குறைஞ்ச வயசில சூப்பர்நோவா கண்டுபிடிச்சவர்ங்கிற பட்டத்தை தட்டி சென்றுள்ளார்.
அந்த இளம் விஞ்ஞானி கண்டுபிடிச்ச சூப்ப்ர்நோவாவுக்கு "SN2008ha" பெயர் வைத்துள்ளனர்.

இதுல இருந்து வருகிற ஒளி நம்ம சூரிய ஒளியை விட 25 மில்லியன் மடங்கு அதிகமாம். வெடிச்சு சிதறின நட்சத்திரத்தின் பாகங்கள் குறைஞ்ச வேகத்துல தான் வருதாம் அதாவது ஒரு மணி நேரத்துக்கு 4.5 மில்லியம் மைல் வேகம் தானாம். சராசரியா இந்த மாதிரி வெடிச்சு சிதறின பாகங்கள் 22 மில்லியம் மைல் வேகதுல வருமாம்.

இதையே ஸ்பீடு கம்மின்னு சொல்லுற ஆளுக நம்ம ஊர் டவுன் பஸ்ஸ என்னான்னு சொல்லுவாங்க.நம்ம ஊரு டவுன் பஸ் 40 கீ.மீ வேகத்துல போனாலே சூப்பர் பாஸ்ட்ன்னு பேர் வச்சுடுவாங்க. இதுல இருந்து என்ன தெரியுது சாதனைக்கு வயது தேவையில்லைன்னு. ஆனா என்ன செய்ய நமக்கு(என்க்கு) தான் ஒன்னும் வரமாட்டீங்குது.

8 comments:

  1. இப்படி மொட்டையா சொன்ன எப்படி!

    எத்தனை மில்லியன் கிலோமீட்டர் தொலைவுல இருக்கு?

    எப்போ வெடிச்சதது?

    எனக்கு ஃபுல் டீடெயில் கொடுங்க!

    ReplyDelete
  2. விஷ்ணு தகவல்கள் அருமை..

    ReplyDelete
  3. நல்லா சொல்றீங்கோ.. டீட்டெய்லு!!
    ம்..ம்.. நடக்கட்டும்!

    ஓட்டு போட்டாசு!

    ReplyDelete
  4. //
    ஆனா என்ன செய்ய நமக்கு(என்க்கு) தான் ஒன்னும் வரமாட்டீங்குது.
    //

    You have to inspire so many young boys like me, don't give up, come on, you have to become a scientist! ;-)

    ReplyDelete
  5. நல்ல தகவல்..சாதனைக்கு வயசு முக்கியமில்லேன்னு புரிய வச்சிட்டீங்க.. இந்த மாதிரி சுவையான அறிவியல் தகவல்களை மேலும் எழுதுங்க..

    ReplyDelete
  6. // வால்பையன் said...
    இப்படி மொட்டையா சொன்ன எப்படி!
    எத்தனை மில்லியன் கிலோமீட்டர் தொலைவுல இருக்கு? எப்போ வெடிச்சதது? எனக்கு ஃபுல் டீடெயில் கொடுங்க! //

    வாங்க வால் அண்ணா. இது நம்ம பூமியில இருந்து 80 மில்லியன் ஒளி ஆண்டுல நடக்குது.
    உங்க அறிவு பசிய பார்த்து வியக்கிறேன்.

    ==================================

    // வினோத்கெளதம் said...
    விஷ்ணு தகவல்கள் அருமை..
    //

    வினோத் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ======================================
    // கலையரசன் said...
    நல்லா சொல்றீங்கோ.. டீட்டெய்லு!!
    ம்..ம்.. நடக்கட்டும்!
    ஓட்டு போட்டாசு! //

    வாங்க கலை. ரொம்ப நன்றி ஓட்டு போட்டதுக்கு. இனி வருகிற பதிவுல விளக்கமா எழுதுறேன்.

    ===================================
    //
    Joe said...

    You have to inspire so many young boys like me, don't give up, come on, you have to become a scientist! ;-)
    //

    வாங்க ஜோ. உங்க அறிவுரைய ஏத்துகிறேன். ஆனா ஒரு விசயம் நானும் சின்ன பையன் தானுங்கோ.

    ===================================
    //
    முக்கோணம் said...

    நல்ல தகவல்..சாதனைக்கு வயசு முக்கியமில்லேன்னு புரிய வச்சிட்டீங்க.. இந்த மாதிரி சுவையான அறிவியல் தகவல்களை மேலும் எழுதுங்க..
    //


    வாங்க முக்கோணம். முக்கோணம் சொன்னதுக்கு அப்புரம் மறுப்பேது கண்டிப்பா இனி பகிர்ந்துகிறேன்

    =============================================

    தீப்பெட்டி said...
    நல்ல தகவல் பாஸ்..

    வாங்க கணேஷ். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது


    உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

    இதில் குறிப்பாக
    1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
    2-ஓட்டளிப்புப் பட்டை
    3-இவ்வார கிரீடம்
    4-சிறப்புப் பரிசு
    5-புத்தம்புதிய அழகிய templates
    6-கண்ணை கவரும் gadgets
    ஒரு முறை வந்து பாருங்கள்
    முகவரி http://tamil10.com/tools.html

    ReplyDelete