Saturday, June 6, 2009

அட நம்மளையும் மதிக்கிறாங்கப்பா

அண்ணன் வணங்காமுடி மாதிரி நல்ல மனுசங்க இருக்கிறவரைக்கும் இந்த பூமில மழை பொய்க்காதுங்கோ. என்னையும் தொடர் பதிவுக்கு அழைச்சுகிட்டு வந்த அண்ணன் வணங்காமுடி அவங்களுக்கு என் நன்றிங்க...


1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

என்னுடைய முழு பெயர் விஷ்ணுகுமார். அப்பாவுக்கு பெருமாள் மேல அளவுகடந்த பக்தியால எனக்கு இந்த பெயரை வச்சுட்டாரு. நமக்கும் இந்த பெயர் ரொம்ப பிடிச்சி போச்சுங்கோ.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

முந்தாநேத்து நானும் என் நன்பனும் ஹோட்டல்ல சாப்பிட்டு 86 ரூபா பில்லுக்கு 500 ரூபா குடுத்தோம் அதுக்கு அந்த கடைகாரன் 14 ரூபா மட்டும் மிச்சம் கொடுத்தான். கேட்டா 100 ரூபா தான் கொடுத்தீன்கன்னு சொல்லுரான். நாங்களும் எவ்வளவோ வாய் சண்டை போட்டு பார்த்தோம்,முடியல, அப்ப மனசு எவ்வளவு அழுததது தெரியுமா

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

கோழி கூட நல்லா கிறுக்குமுன்னு ஆறாம் வகுப்பு டீச்சர் என்னோட விரல் முட்டிலே அடிச்சாங்க. ஆனா அவங்க அடிச்ச அடிக்கு பலன் இல்லாம போயிருச்சு

4.பிடித்த மதிய உணவு என்ன?

சோறு கண்ட இடம் சொர்க்கம்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

என்னோட என்ன அலைவரிசை ஒத்து போறவங்கன்னா விடா பிடியா பிடிச்சுக்குவேன் அப்படி இல்லாட்டி ஹாய்...பாய் தான்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா... அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடல் தான் நம்மளோட பேவரிட். சும்மா அலை அலையா வந்துகிட்டு, அலையுல நின்னு கிட்டு இருந்தா சும்மா முன்ன பின்ன தள்ளி விட்டுகிட்டு இருக்கும் பாருங்க.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகத்தை தான்... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வடிவத்தை கொடுத்த இயற்கையின் பரிசை எப்படிங்க பார்க்காம இருக்க முடியும்.
எப்படி தான் அழகா இருக்காங்களோ...

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

யாரு ஏதாவது கேட்டா உடனே இரக்கபடுவது பிடிச்ச விசயம்

பட்டு திருந்தாத ஜென்மம் - இது பிடிக்காத விசயம்

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

31-வது கேள்விக்கான பதிலும் இதுவும் ஒன்னு.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்படில்லாம் யாரும் கிடையாதுங்க.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

கரண்ட வேற கட் பண்ணிட்டானுங்க. நீல கலர் லுங்கியோட உக்காந்திருக்கங்க.

12.என்ன பார்த்து // கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

கொக்கு சைவ கொக்கு ஒரு கெண்ட மீனை கண்டு பாட்டு கேட்டுட்டு இருக்கேங்க.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

பசுமை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

14.பிடித்த மணம்?

மண்ணென்னைய் அடுப்பு பற்ற வைக்கும் பொழுது வருகிற வாசனை ரொம்ப பிடிக்கும்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

முக்கோணம் : இவரோட எழுத்தில எப்பொழுது சமூக அக்கறை இருக்கும். நான் என்ன தான் மொக்கயா பதிவு போட்டாலும் புகழுந்து கமண்ட் அடிக்கிற ரொம்ப ரொம்ப நல்ல மனிதர்.

களப்பிரர் : கொஞ்சமா எழுதுவார் ஆனா ரொம்ப நல்லா எழுதுவார்.

சிவசுப்பிரமணியன் : நிகழ்காலத்தில்ன்னு பெயர் கொண்டு எழுதுபவர். ரொம்ப தன்னபிக்கை உடைய எழுத்துகள் இவரிடம் இருந்து வரும். ஆனா இவர் ஏற்கனவே தொடர் பதிவுல கலந்துகிட்டாரு.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு?

கொஞ்சம் இல்ல ரொம்பவே நக்கல் அடிக்கிற மனிதர். அவர் எழுதினதுல எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு ஆர்குட் அல்ச்சாடியம்


17. பிடித்த விளையாட்டு?

எத்தனை பேரு விளையாடுரோமோ அத்தனை குழி தோண்டிகிட்டு, பந்தை உருட்டி விட்டு யாரோட குழியில விழுதோ அவங்க பந்தை எடுத்து அடுத்தவங்க மேல எறியனும் அதுக்குள்ள அத்த்னை பேரும் ஒரு குறிபிட்ட தூரத்தில இருக்கிற போஸ்ட் கம்பத்தை தொடனும் அப்புரம் அந்த பையன் பந்தை மேலே தூங்கி போட்டு கிட்டே இருப்பான் அதுகுள்ள குழிய வந்து தொடனும், அப்படி எல்லாரும் குழிய தொட்ட்டுட்ட அவனுக்கு ஒரு பிள்ளைன்னு ஒரு சின்ன கல்ல தூக்கி அவன் குழியில போட்டிடுவோம் கடைசில யாரு அதிகமா பிள்ளை வாங்கி இருக்காங்களோ அவங்க தான் தோத்தாலி. ஆமாங்க அதுக்கு பேரு தான் குழி பந்து

18.கண்ணாடி அணிபவரா?

டாக்டரே வேண்டான்னு சொன்னதுக்கு அப்புரமும் கண்ணாடி போடனுமுன்னு சொல்லி ஒரு மூணு மாசம் போட்டுகிட்டு அலைஞ்சேன் அதுக்கப்புரம் அந்த ஆசை விட்டு போச்சுங்க.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

காமெடி படங்கள் என்றால் உயிர்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க படம். அய்யோ! என்னாமா எடுத்திருக்காங்க

பசங்க படமுன்னு சொன்னதுனால ஒரு ப்ளாஸ்பேக். ஒரு சமயம் எங்க ஊருல பயங்கரமான தண்ணி பஞ்சம். அப்ப என்னோட கூட்டாளிகளோட சைக்கிள்ல மூணு நாலு கிலோ மீட்டர் போய் அடி பைப்புல தண்ணி அடிச்சிட்டு கொண்டு வருவேன் அதுக்கு அம்மாகிட்ட நான் வங்கிற லஞ்சம் இருபத்தைந்து பைசா. ஆனா என்ன சும்மா மூணு நாலு மணி நேரம் காத்துகிடந்து அடி பம்புல இரண்டு குடம் தண்ணி அடிச்சிட்டு வருவோம். இதனால பசங்கலெல்லாம் சேர்ந்து ஊருக்கு வெளியில ஆளே இல்லாத அடி பம்பு தேடி கண்டு பிடிப்போம். ஒரு மணி நேரத்தில தண்ணி கொண்டு வந்திருவோம். அதனால எங்க ஏரியாவுல எங்களுக்கு கில்லாடி பசங்கன்னு பேரு.


21.பிடித்த பருவ காலம் எது?

மார்கழி மாசம் நாலு மணிக்கெல்லாம் எந்திருச்சி குளிச்சி கோயிலுக்கு போய் அங்க கொடுக்கிற பொங்கலை இலையில வச்சுகிட்டு அப்படியே எடுத்து சாப்பிட்ட பொங்கல் குறைஞ்சி போயிருமுன்னு தொட்டு தொட்டு நக்கிட்டு வந்த காலம்.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

அட போங்க... பிளாக்கர்ஸ் சொல்லுற மேட்டரே படிக்க முடியாம வதவதன்னு இருக்கு. அப்புரம் எதுக்கு புக்கு.

23.உங்கள் டெஸ்க்டொப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அனிமல்ன்னா அப்படி ஒரு பிரியம் ஏன்னா குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன். சில நேரத்தில ஒரு நாளைக்கு ஆறு ஏழு படம் கூட மாத்துவேன்.

24.பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

ஒரு தொலைபேசி உரையாடலுக்காக நான் காத்திருக்கும் பொழுது அவர் தருகிற செல்போன் ரிங் சப்தம். இளையராஜவின் பாட்டு சப்தம் ரொம்ப பிடிக்கும்

பஸ் கொடுக்கிற ஹாரன் சப்தம் கண்டாலே எரிச்சல் வரும்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

ஒரே ஒரு முறை டெல்லி போயிக்கேன் ஆனா தாஜ்மகால் பாக்கலிங்க.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இது என்னை அவமானபடுத்த வேண்டும் என்றே கேட்க பட்ட கேள்விங்க.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

உள்குத்தோட இருக்கிறவங்களை நம்மால ஏத்துகிற முடியாதுங்கோ.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

"ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்"


29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சுற்றுலா தலம் என்று சொல்ல முடியாது ஆன்மிக தலம்
திருநெல்வேலியிருந்து நாகர்கோவில் செல்லும் பாதையில் உள்ள திருகுறுங்குடி, 90 நிமிடம் ம்லையில் ந்டந்து சென்று பெருமாளை தரிசித்துவிட்டு ம்லை மேல் ஓடுகிற ஆற்றங்கலையில் தனிமையில் அமர்ந்தால் உலகம் மறந்துவிடும்.


30.எப்படி இருக்கணும்னு ஆசை?

காலத்தோட ஓட்டத்தில் கரைந்து போகம இருக்கனும்.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?

யாரவது என்னோட அப்பா அம்மாகிட்ட சொல்லுங்களேன். பையனுக்கு வயசாகிட்டே போகுதுன்னுஇன்னும் சின்ன பிள்ளையாவே நினைக்கிறாங்க.

அய்யயோ சும்மா சொன்னேங்க நீங்க வாட்டுக்க சொல்லிடாதீங்க நான் இன்னும் சின்ன பையனுங்கோ.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்ந்து பாத்தவன் நாடகம்பான்.
வாழ்ந்துகிட்டு இருக்கிறவன் நரகம்பான்
வாழ போறவன் நாளை நமதேம்பான்.

மொத்ததில் வாழ்க்கையை பார்த்தா இடியாப்பம் சும்மா தேங்கா பால் ஊத்தி சாப்பிட்டா அமிர்தம்.

33 comments:

  1. //oh god. idhu enna kalaattaa?


    கடைசியாக அழுதது எப்பொழுது?

    முந்தாநேத்து நானும் என் நன்பனும் ஹோட்டல்ல சாப்பிட்டு 86 ரூபா பில்லுக்கு 500 ரூபா குடுத்தோம் அதுக்கு அந்த கடைகாரன் 14 ரூபா மட்டும் மிச்சம் கொடுத்தான். கேட்டா 100 ரூபா தான் கொடுத்தீன்கன்னு சொல்லுரான். நாங்களும் எவ்வளவோ வாய் சண்டை போட்டு பார்த்தோம்,முடியல, அப்ப மனசு எவ்வளவு அழுததது தெரியுமா

    ReplyDelete
  2. \\முகத்தை தான்... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வடிவத்தை கொடுத்த இயற்கையின் பரிசை எப்படிங்க பார்க்காம இருக்க முடியும்.
    எப்படி தான் அழகா இருக்காங்களோ...\\
    \\கொக்கு சைவ கொக்கு ஒரு கெண்ட மீனை கண்டு பாட்டு கேட்டுட்டு இருக்கேங்க.\\
    \\டாக்டரே வேண்டான்னு சொன்னதுக்கு அப்புரமும் கண்ணாடி போடனுமுன்னு சொல்லி ஒரு மூணு மாசம் போட்டுகிட்டு அலைஞ்சேன்\\
    \\ஒரு தொலைபேசி உரையாடலுக்காக நான் காத்திருக்கும் பொழுது அவர் தருகிற செல்போன் ரிங் சப்தம்\\

    கோர்வையாக பார்த்தம் வீட்ல பேசிவிட வேண்டியதுதான், வேற வழியே இல்லை

    அப்புறம் அழைப்புக்கு நன்றி., ஏற்கனவே தொடர்பதிவில் கலந்து கொண்டதால் அதையே
    பதிலாகக் கொள்ளவும்.

    ReplyDelete
  3. //வாழ்ந்து பாத்தவன் நாடகம்பான்.
    வாழ்ந்துகிட்டு இருக்கிறவன் நரகம்பான்
    வாழ போறவன் நாளை நமதேம்பான்.//

    நல்லா சொல்லியிருக்கீங்க பதில்களை!
    உண்மையாக இருந்த்து

    ReplyDelete
  4. //மொத்ததில் வாழ்க்கையை பார்த்தா இடியாப்பம் சும்மா தேங்கா பால் ஊத்தி சாப்பிட்டா அமிர்தம். /

    -:)

    ReplyDelete
  5. Nalla irukkuda machan
    idu eppa irunthu intha palakkam

    enake theriyatha matterlam niraya irukku

    keep it up

    ReplyDelete
  6. //26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
    இது என்னை அவமானபடுத்த வேண்டும் என்றே கேட்க பட்ட கேள்விங்க.
    *****
    3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
    கோழி கூட நல்லா கிறுக்குமுன்னு ஆறாம் வகுப்பு டீச்சர் என்னோட விரல் முட்டிலே அடிச்சாங்க. ஆனா அவங்க அடிச்ச அடிக்கு பலன் இல்லாம போயிருச்சு..
    *****
    முக்கோணம் : இவரோட எழுத்தில எப்பொழுது சமூக அக்கறை இருக்கும். //

    அருமையான நையாண்டி பதில்களுங்க...இந்த மாதிரியான நையாண்டி மற்றும் உங்க நல்ல படைப்பாற்றலுக்கும் நான்
    தீவிர விசிறிங்க... (மத்தபடி என்னையும் ஒரு பதிவனா மதிச்சு தொடர் பதிவுக்கு அழைச்சதுக்கு நன்றிங்க..என்னை வேற ரொம்ப நல்லவன்னு சொல்லீட்டீங்களே..!! முடியலை..!)

    ReplyDelete
  7. ///மொத்ததில் வாழ்க்கையை பார்த்தா இடியாப்பம் சும்மா தேங்கா பால் ஊத்தி சாப்பிட்டா அமிர்தம்.///***************************


    தத்துவம் நம்பர் 2010

    ReplyDelete
  8. //காமெடி படங்கள் என்றால் உயிர்.//

    உயிர் காமெடி படம் அல்ல தல..,

    ReplyDelete
  9. "ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்" //

    ஓ அப்படியா... நல்ல முடிவா பண்ணுங்க...

    ReplyDelete
  10. 26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

    இது என்னை அவமானபடுத்த வேண்டும் என்றே கேட்க பட்ட கேள்விங்க. ///

    இதுவேறயா... இது மாதிரித்தான் உங்கள அவமானம் படுத்தறாங்களா. யாருப்பா இந்த கேள்வி கேட்டது...

    ReplyDelete
  11. மொத்ததில் வாழ்க்கையை பார்த்தா இடியாப்பம் சும்மா தேங்கா பால் ஊத்தி சாப்பிட்டா அமிர்தம்.//

    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு...

    ReplyDelete
  12. //oh god. idhu enna kalaattaa?

    வாங்க தமிழ்நெஞ்சம். கலாட்டாவா. நானே நெந்து போயிருக்கேன்...

    ReplyDelete
  13. நிகழ்காலத்தில்... said...

    // கோர்வையாக பார்த்தம் வீட்ல பேசிவிட வேண்டியதுதான், வேற வழியே இல்லை//


    சிவா சார் அப்படியெல்லாம் செஞ்சுறாதீங்க.

    ReplyDelete
  14. //கலையரசன் said...

    நல்லா சொல்லியிருக்கீங்க பதில்களை!
    உண்மையாக இருந்த்து //

    நன்றி கலை. ஏதோ நம்மால முடிஞ்சது.

    ReplyDelete
  15. வருகைக்கு நன்றி...பித்தன்

    ReplyDelete
  16. // Education said...

    வா மாப்ள இன்னும் நிறையா இருக்கு.

    ReplyDelete
  17. // அருமையான நையாண்டி பதில்களுங்க...இந்த மாதிரியான நையாண்டி மற்றும் உங்க நல்ல படைப்பாற்றலுக்கும் நான்
    தீவிர விசிறிங்க...
    //

    வாங்க முக்கோணம்.. பொது இடத்துல இப்படி எல்லாம் பேசாதீங்க. கண்ணுபட்டுற போகுது.

    ReplyDelete
  18. // உயிர் காமெடி படம் அல்ல தல..,//

    வாங்க சுரேஷ்.
    உங்க நக்கல் உலக நக்கலால இருக்கு

    ReplyDelete
  19. // தத்துவம் நம்பர் 2010 //

    வாங்க வசந்த்.
    தத்துவத்தை தஞ்சாவூர் கல் வெட்டுல செதுக்க கொஞ்சம் ரெக்கமண்ட்டு பண்ணுங்களேன்.

    ReplyDelete
  20. வாங்க வணங்காமுடி அண்ணன்.

    /// ஓ அப்படியா... நல்ல முடிவா பண்ணுங்க...//

    பண்ணிட்டா போச்சு

    // இதுவேறயா... இது மாதிரித்தான் உங்கள அவமானம் படுத்தறாங்களா. யாருப்பா இந்த கேள்வி கேட்டது...//

    பாஸ் நீங்கதானுங்கோ...

    //அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு...//

    அய்யயோ இது வேறயா

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. //
    அட போங்க... பிளாக்கர்ஸ் சொல்லுற மேட்டரே படிக்க முடியாம வதவதன்னு இருக்கு. அப்புரம் எதுக்கு புக்கு.
    //
    காசு கொடுத்து புத்தகம் வாங்காத பிஸ்நாரிப் பயங்கிரத மறைக்க இப்பிடி ஒரு பிட்டா?

    ReplyDelete
  23. வாங்க ஜோ..

    // காசு கொடுத்து புத்தகம் வாங்காத பிஸ்நாரிப் பயங்கிரத மறைக்க இப்பிடி ஒரு பிட்டா? //

    ஹி..ஹி.. கண்டிபிடிச்சா உங்களுக்குள்ளே வைச்சுக்கோங்க ஜோ. பொது இடத்துல எல்லாம் அசிங்கபடுத்த கூடாது சொல்லிபுட்டேன்.

    ReplyDelete
  24. பதில்கள் அட்டகாசமாக இருக்கு விஷ்ணு !

    ReplyDelete
  25. வாழ்ந்து பாத்தவன் நாடகம்பான்.
    வாழ்ந்துகிட்டு இருக்கிறவன் நரகம்பான்
    வாழ போறவன் நாளை நமதேம்பான்.

    மொத்ததில் வாழ்க்கையை பார்த்தா இடியாப்பம் சும்மா தேங்கா பால் ஊத்தி சாப்பிட்டா அமிர்தம்.

    அருமை.தொடர்ந்து கலக்குங்க

    ReplyDelete
  26. ரொம்ப நன்றி கோவி.கண்ணன் சார்.

    ReplyDelete
  27. தம்பி நல்லா எழுதுறீங்க!

    ReplyDelete
  28. நீங்க எப்பவுமே நம்ம ஆளுதாங்க. நன்றி நம்ம ஆளு..

    ReplyDelete
  29. Nalla irukku.. podhum.. azhudhuruven...

    ReplyDelete
  30. வாங்க முரளி. வடிவேலு சொன்னது ஞாபகபடுத்திக்கோங்க "நீ என் இனமடா"

    ReplyDelete
  31. Vinitha said...
    தம்பி நல்லா எழுதுறீங்க!

    நன்றி வினிதா அக்கா.

    ReplyDelete