Wednesday, April 29, 2009

தன்மான மொட்டு


ஆறாம் வகுப்பு படிக்கும் இரமேஷ், காலையிம் எழுந்ததும் கொஞ்சம் கலக்கமாகவே இருந்தான். கடந்த ஒரு வாராமாக அறிவியல் புத்தகம் வாங்க வேண்டும் என்று அடம்பிடிக்க முடிந்ததே தவிர அவ்னால் அந்த காரியத்தை நிறைவேற்ற முடியவில்லை. நேற்று இரவு ஊரே கூடும் அளவுக்கு ஒரே அழுகை முடிவு நான்கு அடிகளுன்னு தூங்க போனவன் இப்பதான் எழுந்தான். அம்மாவிடம் போய்

"மாமாகிட்ட தான் நிறைய காசு இருக்கில்ல அவருக்கிட்ட போய் வாங்கிரேன்"

"ஏய் அப்பாவுக்கு அசிங்கம் டா அது, இன்னைக்கு ஸ்கூலுக்கு போ நாளைக்கு அப்பாவ வாங்கி தர சொல்லுரேன்"

வாத்தியார் வெளியில் நிற்க வைத்தது தன் சக நண்பர்கள் தன்னை பாவமாகவும் ஏளனமாகவும் பார்த்தது எல்லாம் கண்முன்னால் தெரிந்தது.
இவர்கள் தன்மான பிரச்சனையில் இரமேஷின் தன்மானம் கொஞ்சம் அதிகமாகத்தான் நசிங்கி போனது.
இன்னைக்கு ஸ்கூலுக்கு போக வேண்டாம் அறிவியல் புத்தகம் வாங்கி தந்ததும் போவோம் என்று நினைத்து வயல் காடுகளின் பக்கம் போய் விட்டான்
அங்கே வயல்களில் தண்ணீர் பாய்ச்சுபவனும் நிரந்தர வேலைகள் ஏதும் இல்லாத மாதவன் இரமேஷை பார்த்துவிட்டான்.

"என்னாடா இங்க சுத்திக்கிட்டு இருக்க" என்று அதட்ட

நடந்தவற்றையும், தான் எடுத்த முடிவையும் இரமேஷ் கூற, சரியாக பட்டது மாதவனுக்கு,தன்னுடனே இருக்குமாறு கூறினான் மாலையில் சரியாக வீடு திரும்பவும் வழி செய்து கொடுத்தான்

வாரம் ஓன்று கடந்தது. அப்பா அறிவியம் புத்தகம் வாங்கி வந்தார் மகிழ்ச்சியுடன்
அதை வாங்கிய இரமேஷ்க்கு சோகம் தழுவியது 'இன்றைக்கு ஸ்கூக்கு போகனுமா' என்று.புத்தக பை எடுத்துக்கொண்டு பள்ளி நோக்கி நடந்தான். கால்கள் வேகத்தை குறைத்தது கண்களால் சுற்றும் முற்றும் பார்த்தான்.
தன்னை போல் வகுப்பறையில் தன்மானம் இழந்த கதிரேஷன் வந்தான் அவனிடம் அறிவியல் புத்தகத்தை கொடுத்துவிட்டு நடந்தான் வயல் பக்கங்கள் நோக்கி.
என்ன அங்கே இன்னொறு மாதவன் உருவாக்க பட்டுகொண்டிருக்கிறான்.

Saturday, April 25, 2009

சுதந்திரம் என்னும் தனிதன்மை


"ஏம்மா நமக்கு நல்ல சாப்பாடு கிடைக்குது நாம பண்ணுற தொழிலை மக்கள் ஏத்துகிறாங்க, நம்மலால மக்கள் சந்தோஷமா இருக்காங்க அப்புறம் ஏம்மா எப்ப பார்த்தாலும்
சோகமா இருக்கீங்க"
"நாமலாவது பரவாயில்லை இன்னொறு இடம் இருக்கு அதுல சும்மா தூங்கிட்டு இருந்தாலே சாப்பாடு கிடைக்கும் அது நம்மல விட மோசம்"
"ஏம்மா சும்மா இருந்தாலே சுகமா இருக்கும்முன்னா நல்லது தானே?"
"அது இல்லப்பா வாழ்க்கை நமக்குன்னு ஒரு தனிதன்மை இருக்கு நமக்கான இடம் இது கிடையாது. உங்க தாத்தா சுதந்திரம் தான் ஒவ்வொறு ஜிவனுக்கும் முக்கியம் முக்கியமுன்னு சொல்லி சொல்லியே செத்து போயிட்டாரு ஏன்னா சுதந்திரம்னா என்னனு அவருக்கு தெரியும், சுதந்திரமா இருந்தவரை இங்க கொண்டுவந்து விட்டதுனால நொந்தே செத்தாரு. இது அடிமை வாழ்க்கைப்பா. உன் தலைமுறையாவது சுதந்திரமா இருக்கனுமுன்னு தெய்வமா போன உன் தாத்தாகிட்ட தினமும் வேண்டிகிறேன், நீ என்னடானா"

தாய் யானை மகன் யானையிடம் சர்க்கஸ் கூடாரத்தில் தன்னுடைய வேலையை (கலை நிகழ்ச்சியை) முடித்துவிட்டு உரையாடிக்கொண்டது.

Tuesday, April 7, 2009

விளக்கு

பதினைந்தாயிரம் ரூபாய் பாக்கிக்காக பார்வதியின் பதிமூன்று வயது மகள் பக்கத்து ஊர் பரமசிவனுக்கு கல்யாணம் முடிக்கபட்டுவிட்டது,மகள் கேட்கிறாள் "எங்கம்மா நான் போரேன்?" அதற்கு அம்மா "பக்கத்து ஊரில் விளக்கு எத்தம்மா?" விளக்கு என்பதே உடைக்கப்பட்டுவிட்டது என்பதை அறியாமல்.